15 ஆண்டு சிறை கயிறு கட்டி இறங்கி நேக்காக தப்பிச்சென்ற பெண் அரசியல் தலைவர்: வைரலான சிசிடிவி காட்சி !

0

கொலம்பியா நாட்டில் சிறையில் அடைப்பட்ட பெண் அரசியல்வாதி, பொலிஸ் காவலில் இருந்து நேக்காக தப்பிச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

2018 கன்சர்வேடிவ் கட்சிக்கான செனட் பொதுத் தேர்தலின் போது வாக்குகளை பணம்கொடுத்து வாங்கிய குற்றத்திற்காக, வடக்கு நகரமான Barranquilla-வைச் சேர்ந்த பெண் அரசியல் தலைவர் மெர்லானோவுக்கு செப்டம்பர் மாதம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, Bogota-வில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் 43 வயதான ஐடா மெர்லானோ. இந்நிலையில், சிகிச்சைக்காக பல் மருத்துவரை காண மெர்லானோ முன் ஏற்பாடு செய்திருந்த நிலையில், சிறை காவலர்கள் அவரை பல் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

மருத்தவமனை அறையை விட்டு காவலர்கள் சென்றவுடன், ஜன்னல் வழியாக கயிறு கட்டி தரைதளத்தில் இறங்கிய மெர்லானோ, கீழே தயாராக நின்றுக்கொண்டிருந்து பைக்கில் சாவகாசமாக ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

சிசிடிவி-யில் பதிவாகிய அவர் தப்பித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து Bogota சிறையின் தலைமை பெண் அதிகாரியை அதிரடியாக பணிநீக்கம் செய்து அந்நாட்டின் நீதியமைசை்சர் Margarita Cabello உத்தரவிட்டார்.

மேலும், கொலம்பியா சிறைத்துறையின் தலைவர் William Ruiz-வை பதவி விலகும்படி கோரியுள்ளார். அதுமட்டுமின்றி 8 சிறை ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளளனர்.

இதனிடையே, தப்பிச்சென்ற மெர்லானோ குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 14,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என William Ruiz அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி !
Next articleபகலில் பள்ளிக்கூடம்.! மாலையில் தொழிலதிபர்- அசத்தல் மாணவன் !