15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியர்! வயதை மறைத்து ஏமாற்றிய குடும்பத்தார்! வெளியான பின்னணி!

0
465

வங்கதேசத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 15 வயது மாணவியை குடும்பங்கள் சூழ திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜலகாதி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுரவ் தாஸ். இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சவுரவுக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் 15 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி இருவருக்கும் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்பதற்காக இரு குடும்பத்தினரும் சேர்ந்து மணப்பெண்ணான சிறுமியின் வயதை மறைத்து ஏமாற்றியுள்ளனர்.

இது குறித்து சிறுமி படிக்கும் கல்லூரியின் முதல்வர் ரபிகுல் கூறுகையில், சிறுமியின் பிறப்பு சான்றிதழை வைத்து அவருக்கு 15 வயது தான் ஆகிறது என்பதை உறுதியாக கூறமுடியும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக குழந்தைகள் நல வாரியம் சார்பாக பேசிய நபர், சவுரவ் திருமணத்தின் போது பொலிசார் அங்கு சென்றனர், நாங்கள் கேள்விப்பட்டவரை இது சட்டவிரோதமான குழந்தை திருமணம் தான்.

இது குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா! எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ!ஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா! எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ!
Next articleதாம்பத்திய உறவை மேம்படுத்தும் மூலிகை!