தாம்பத்திய உறவை மேம்படுத்தும் மூலிகை!

0

உடலை பாதுகாக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும் உதவக்கூடிய காயல்கல்ப மூலிகைகளை சித்தர்கள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தும் விதம் பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர்.

மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது அவற்றுடன் உலோக பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்தி பத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயகல்ப மூலிகையாக தூதுவளை போற்றப்படுகிறது. தரிசு நிலங்களிலும், நீர் அதிகம் தேங்கும் பகுதிகளிலும் வளரும் மூலிகையான தூதுவளையின் இலை, வேர், மலர், கனிகள் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து சொலசோடைன்,டோமடிட், சொலமரைன் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இலைகள் கசப்பானவை, இருமல் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. வேரின் கசாயம் காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்துகிறது. முழுத்தாவரமும் ஆஸ்துமா, தொடர்ந்த மூச்சுக்குழல் அழற்சி, இருமல், காய்ச்சல், மற்றும் குழந்தைப் பேறு மருத்துவத்தில் பயன்படுகிறது.

தைராய்டு கட்டிகள்
தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது.. குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். இவற்றை நீக்குவதில் தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

நினைவாற்றல் பெருகும்
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

புற்றுநோய் குணமடையும்
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய நேரிட்டால் தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம்.

தாம்பத்ய உறவு மேம்படும்
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியர்! வயதை மறைத்து ஏமாற்றிய குடும்பத்தார்! வெளியான பின்னணி!
Next articleமூளையை சுறுசுறுப்பாக்க வைக்க உதவும் பகல் நேர குட்டித் தூக்கம்!