15-வயது கனடிய பெண்ணிற்கு கிடைத்த அதிஷ்டம்!

0
299

பீற்றபொறோ, ஒன்ராறியோ–15-வயதுடைய ஒன்ராறியோ தெற்கை சேர்ந்த பெண் ஒருவர் தொண்டு பணிக்கான அதிக மதிப்பெண்கள் பெற்று இளவரசர் ஹரி மற்றும் மெகன் மார்க்லெ திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்.

வெயித் டிக்கின்சன், டயானா விருது மூலம் இந்த இடத்தை பிடித்துள்ளார். இளவரசர் ஹரியின் தாயாரும் வேல்ஸ் இளவரசியுமான மறைந்த டயானா பெயரில் அமைக்கப்பட்டது இந்த வழிகாட்டு திட்டம்.

தெரிவு செய்யப்பட்ட ஏழு இளவயதினர்களில் இவரே ஒரு கனடியர் என விருது அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

வின்சர் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள பொது கேலரியில் திருமண வைபத்தில் கலந்து கொள்வார்.

கடந்த வருடம் டிக்கின்சன் உருவாக்கிய Cuddles for Cancer தொண்டு சேவை காரணமாக டயான விருதை வென்றார். இத்தொண்டு சேவை மூலம் புற்றுநோயாளிகளிற்கும் போர் களங்களில் இருந்து காயமடைந்து அல்லது மன உழைச்சல் சீர்குலைவுகளினால் நாடு திரும்பிய வீரர்களிற்கும் இலவச போர்வைகளை வழங்கினார்.

இவருடன்அழைக்கப்பட்ட மற்றவர்கள் அனைவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள்.

இத்திருமண வைபவத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் உலக தலைவர்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும் 1,200 பொது உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக-சமூக பணியாற்றிய இளவயதினர் உட்பட- கென்சிங்ரன் மாளிகை தெரிவித்துள்ளது.

டிக்கின்சன் இவரது சிற்றன்னைக்கு மார்பக புற்றுநோய் வந்த போது தனது ஒன்பது வயதில் தொண்டு சேவையை ஆரம்பித்தார்.

சிகிச்சை காலத்தில் இவரது சிற்றன்னை மிகவும் குளிராக இருக்கின்றதென தெரிவிக்க அவரிற்காக கம்பளிக்கு மாற்றாக இலகு ரக போர்வை ஒன்றை செய்து கொடுத்தார்.

அன்றிலிருந்து 3,000ற்கும் மேற்பட்ட போர்வைகளை தயாரித்து-ஒவ்வொன்றும் அதனை பெறுபவர்களின் பொழுது போக்குகள் அல்லது பிடித்தமான நிறம் குறித்த விபரங்களுடன்- தயாரிக்கப்பட்டவை.

இவ்வாறு தயாரிக்கப்பட்டவை கனடா பூராகவும் மட்டுமன்றி யு.எஸ்., யு.கே., ஜேர்மனி, பிரேசில், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளிற்கும் அனுப்பபட்டது.

அது மட்டுமன்றி தேவையானவர்களிற்கு போர்வைகள் வழங்க 30,000டொலர்கள நிதியும் சேர்த்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: