12 ராசிக்காரர்களும் பணக்காரராக வர வேண்டுமா? ஜோதிடத்தின் படி பணத்தை சேமிப்பதற்கான சரியான வழி!
தற்போதுள்ள அவசர வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவையான, இன்றியமையாத ஒன்றாக பணம் மாறிவிட்டது. சிலர் சிறிய முயற்சியிலேயே பெரியளவில் பணம் சம்பாதித்து விடுகின்றனர். சிலரோ கடுமையான உடல் மற்றும் அறிவின் உழைப்பை போட்டாலும் பெரியளவில் சம்பாதிக்க முடிவதில்லை.
மேஷம்
மேஷ ராசியினர் புதிய பொருட்களை வாங்க அதிகம் ஆசைப்படுவர். அதனால் செலவுகள் மிகவும் அதிகரிக்கும்.
இவர்கள் ஷாப்பிங் செய்ய செலவிடும் தொகையை குறைத்துக் கொள்வதும், இந்த பொருள் தேவைதானா என்ற கேள்வி எழுந்தாலே சேமிக்க நிறைய பணம் கையில் இருக்கும். ஒவ்வொரு செலவை செய்யும் முன் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசியினர் பண விஷயங்களில் மிகவும் நிலையானவர்கள். இருப்பினும் இவர்களுக்கு திடீரென ஆடம்பர மற்றும் விலை உயர்ந்த பொருள் வாங்க விரும்பம் எழும் போது எதையும் யோசிக்காமல் நிறைய செலவு செய்கின்றனர்.
எனவே ஆடம்பர செலவு, பெரிய செலவுகள் செய்வதற்கு முன் கவனமாக செயல்படுவது புத்திசாலித்தனமானது.
மிதுனம்
மிதுன ராசியினர் பண சேமிப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து நிலையற்ற மனம் கொண்டவர்களாகவும், கணிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் பெரும்பாலும் மனக்கிளர்ச்சி அல்லது ஆசையின் காரணமாக எதையும் யோசிக்காமல் செலவினங்களைச் செய்ய முனைகிறார்கள். எனவே, உங்கள் எதிர்காலத்திற்கான சேமிப்பு பணத்தை எடுத்து வைத்துவிட்டு உங்கள் செலவுகளைத் தொடங்குவது அவசியம்.
கடகம்
கடக ராசியினர் உண்மையில் சேமிப்புக்கான ஆலோசனையோ, உதவிக்குறிப்புகளோ தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களாக இருப்பதோடு, எதிர்கால திட்டங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள்.
எனவே எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சேமிக்கும் எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் வீண் செலவுகளை கவனித்துக் கொள்வதால் செலவை கட்டுப்படுத்த முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியினர் லட்சியவாதிகள் மற்றும் ஆக்கப்பூர்வமானவர்கள். இருப்பினும் பணத்தை மிச்சப்படுத்துவதில் அவ்வளவு சிறப்பானவர்கள் இல்லை.
இவர்கள் தங்களை ட்ரெண்டிங்கில் வைத்துக் கொள்ள விரும்புவதால், புதிய ஆடை, ஆபரணங்கள், பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் அதில் அதிக செலவிடுகின்றனர். முக்கிய தேவைகளுக்கு செலவிடலாம். ஆனால் மகிழ்ச்சி தருகிறது என்பதற்காக புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்ப்பது அவசியம்.
கன்னி
கன்னி ராசியினர் நடைமுறை நிதர்சனத்தை உணர்ந்தவர்கள், எச்சரிக்கையான மற்றும் கடின உழைப்பாளிகள். எனவே, அவர்கள் பணம் சேமிப்பு குறித்து அதிக விழிப்புடன் இருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு செலவை செய்யும் முன் சற்று சிந்தித்து செயல்படுவது மேலும் நலனைத் தரும்.
துலாம்
துலாம் செலவு மற்றும் சேமிப்புக்கு இடையில் சமநிலையை அறிந்தவர்கள். ஆனால் இவர்கள் தனியாக இருக்க விரும்பாமல், எப்போதும் உறவு அல்லது நண்பர்களுடன் சேர்ந்து, பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதால் அதன் மூலம் அதிக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.
எனவே, உங்கள் வருமானம், சேமிப்பு மற்றும் செலவு குறித்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதோடு, பட்ஜெட் போட்டு செலவழிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்பதோடு, செலவுகள் அதிகம் செய்ய விரும்பாதவர்கள். இதனால் சேமிப்பு சிறப்பாக இருக்கும். அதோடு இவர்களின் வருவாய் குறித்து எப்போதும் ரகசியமாக இருப்பதால் பொருட்கள் சேரும். இவர்கள் எதிர்கால திட்டத்தை வகுத்து அதற்கேற்றார் போல சேமிக்க தொடங்குவது அவசியம்.
தனுசு
தனுசு ராசியினர் சுதந்திரத்தையும், பயணத்தையும் விரும்புபவர்கள். புதிய பொருட்களின் அனுபவங்களைப் பெற விரும்புபவர்கள். எனவே, புதிய பொருட்களை வாங்குவதற்காக நிறைய செலவு செய்கிறார்கள்.
எந்த ஒரு புதிய பொருட்களை வாங்குவதற்கு முன்னர் அது உங்கள் வாழ்க்கைக்கு தேவைதானா, எத்தனை நாட்கள் அந்த பொருட்களைப் பயன்படுத்தப்போகிறோம் என்பதை எல்லாம் ஆராய்ந்து செலவு செய்வது அவசியம்.
மகரம்
மகர ராசியினர் இயற்கையிலேயே மிகவும் ஒழுக்கமானவர்கள், வளமானவர்கள் மற்றும் பணத்தை சிறப்பாக மேலாண்மை செய்யக்கூடியவர்கள். சேமிக்கும் விஷயத்தில் மற்ற ராசியினரை பின்னுக்குத் தள்ளு மகர ராசியினர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் எதிலும் மிகவும் தாராளமானவர்கள். இவர்கள் பெரும்பாலும் தர்மம் செய்ய செலவிடுவார்கள். தான, தர்மம் செய்வது தவறல்ல, இருப்பினும் உங்களுக்கான சேமிப்பிற்கு எடுத்து வைத்துவிட்டு தாராளமாக தான, தர்மங்கள், தொண்டு விஷயங்களை செய்யலாம்.
மீனம்
மீன ராசியினர் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அவர்கள் சிந்திக்க பணத்தை தவிர வேறு விஷயங்கள் உள்ளன. மீன ராசியினர் அதிகம் சம்பாதிக்கக்கூடியவர்கள் தான் இருப்பினும், சேமிப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்து கொண்டு சேமிக்கத் தொடங்குவது மிகவும் அவசியம்.