Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 11.12.2018 இன்றைய ராசிப்பலன் செவ்வாய்க்கிழமை!

11.12.2018 இன்றைய ராசிப்பலன் செவ்வாய்க்கிழமை!

0
1996

இன்றைய பஞ்சாங்கம்
11-12-2018, கார்த்திகை 25, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.22 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.29 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 01.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் மற்றவர்களிடம் பேசும்பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

கடகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

துலாம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

மகரம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்ப-டலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

மீனம்
இன்று நீங்கள் புது தெம்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் உண்டாகும்.

Previous article10.12.2018 இன்றைய ராசிப்பலன் – திங்கட்கிழமை !
Next articleசளித் தொந்தரவு, மூச்சு உறுப்புகளின் நோய்களை நீக்கும்செயல்திறன் மிக்க வேதிப்பொருள் திப்பிலி!