11 பேர் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தில் மீட்கப்பட்ட கடைசி உயிரும் பிரிந்தது!

0
267

டெல்லியில் மோச்சம் அடைய வேண்டும் என்ற நோக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் இருந்து கடைசியாக மீட்கப்பட்ட அவர்களது வளர்ப்பு நாயும் இறந்துபோனது.

11 பேர் தற்கொலை செய்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கட்டிப்போடப்பட்டிருந்த டாமி என்ற நாய் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. பின் நொய்டாவில் உள்ள விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

11 பேர் தற்கொலை செய்துகொண்ட பின் இரண்டு நாட்கள் இந்த டாமி எந்த உணவையும் தொடவில்லை. பட்டினியாக கிடந்த டாமி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அடுத்த சில நாட்களில் சகஜ நிலைக்குத் திரும்பிய டாமி, நன்றாகச் சாப்பிட்டது. நட்பாகப் பழகியது.

இதுபற்றி விலங்கள் நல நிபுணர் சஞ்சய் மொகபத்ரா என்பவர் கூறியதாவது, டாமியுடன் காலையிலும் மாலையிலும் பேசத் தொடங்கினேன். அது வாலை ஆட்டும். என்னுடன் வாக்கிங் அழைத்துச் செல்வேன். நேற்று மாலைவரை நன்றாக இருந்தது. ஆறு மணிக்கு அதற்கு இதய பிரச் னை காரணமாக மயங்கி விழுந்தது.

கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். எவ்வளவோ முயன்றும் அதை பிழைக்க வைக்க முடியவில்லை

இதையடுத்து 11 பேர் தற்கொலை செய்யப்பட்ட வீட்டில் மீட்கப்பட்ட கடைசி உயிரும் நேற்று பறிபோனது என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: