11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்.

0

ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்!!

வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தை சேர்ந்தவர் ஜிரியா பார்ன் புயாயாய் (32), இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் பணம் சம்பாதிக்க புதிய யுக்தியை கையாண்டார்.

தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்.

அதன்படி, 11 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்த ஜிரியா பார்ன், அவர்களிடம் இருந்து வரதட்சணையாக பணத்தை பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

பின்னர், ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்துள்ளார். ஜிரியா பார்ன்-யிடம் ஏமாந்த ஆண்கள் அனைவரும் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தனது சொந்த ஊரில் இருந்த ஜிரியா பார்னை பொலிசார் கைது செய்துள்ளனர், பேஸ்புக் சமூக வலைதளத்தில் தனது போட்டோவை ஜிரியா பார்ன் பதிவிட்டு ஆண்களை மயக்கியது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுடைய நகங்கள் இப்படி இருந்தால் நீங்கள் இந்த விடயங்களில் இப்படி நடந்து கொள்வீர்களாம்!
Next articleஇன்றைய ராசிபலன் 11-09-2017