பிஸ்தாவில் கொழுப்பு அதிகம் என நினைத்து ஒதுக்கி வைப்பீர்களா? அது தவறு.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், விட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தினமும் உள்ளங்கை கொள்ளும் அளவு பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இதிலுள்ள விட்டமின் பி6, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
உடலின் மெட்டபாலிசத்தை தக்கவைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பிஸ்தாவில் உள்ள சத்துக்கள் நரம்பு மண்டலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.
ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்குகின்றன.
அத்துடன் புறஊதாக கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாத்து சரும புற்றுநோய் வருவதை தடுக்கின்றன.
இதிலுள்ள விட்டமின் ஈ சருக அழகை அதிகரிக்கவும் செய்கிறது, ஈரத்தன்மையை பாதுகாப்பதால் புதுப்பொலிவுடன் சருமம் ஜொலிக்கும், நீண்டநாள் இளமையுடன் இருக்கலாம்.
முக்கியமாக பிஸ்தாவில் உள்ள கரோடனாய்ட்ஸ், சியாந்தின் மற்றும் லுடெய்ன் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுக்கிறது.
கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது, பிஸ்தாளில் உள்ள பாஸ்பரஸ், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள உணவாகும்.
எப்படி சாப்பிடலாம்?
பிஸ்தாவை நெய்விட்டு வறுத்து தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது செரிமானத்தை அதிகப்படுத்துவடன் சுறுசுறுப்பும் உண்டாகும்.
லேசாக பிஸ்தாவை வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து கற்கண்டுடன் சேர்த்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடையும்.
பிஸ்தாவின் மூலம் தயாரிக்கப்படும் மாஸ்க்கை கூந்தலுக்கு போட்டால், கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கின்றது. இதனால் கூந்தலுக்கு பிளவு ஏற்படாமல் நன்றாக வளரவும் உதவுகின்றது.




