Home thatstamil one india tamil oneindia tamil ஸ்ரீ ரெட்டியின் பரபரப்பு புகார் ! சிக்கித் தவிக்கும் விஷால்!

ஸ்ரீ ரெட்டியின் பரபரப்பு புகார் ! சிக்கித் தவிக்கும் விஷால்!

0
688

தமிழ் திரையுலகினர் மீது பாலியல் புகார்களை கூறிவரும் ஸ்ரீரெட்டி, நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிர வைத்துள்ளார்.

தற்பொழுது அவர் டர்ன் தமிழ் திரையுலகின் பக்கம். இதுவரை அவரது லிஸ்டில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். இன்னும் என் லிஸ்டில் பல தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்ளார்கள் என்றும் அவர்கள் பெயரை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாகவும் அதனால் தான் பயப்படப்போவதில்லை எனவும், கோலிவுட் சினிமாவின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த பலர் சங்கத்து வேலைய பாருடான்னு சொன்னா அங்கத்து வேலைய பாத்துக்கிட்டு இருக்க என விஷாலை கிண்டலடித்து வருகின்றனர்.

Previous articleதந்தை, காதலனுடன் இணைந்து இளம் பெண்கள் செய்த மோசமான செயல்!
Next articleபல நடிகர்களின் கசமுசாக்களை வெளிப்படுத்தும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி என்ன சொல்லிவிட்டார் பாருங்க!