அமெரிக்காவில் குடிபோதையில் உளறிக் கொண்டே வந்தவரை காரின் ஓட்டுநர் அலேக்காக தூக்கி வெளியே வீசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தைச் சேர்ந்த இளைஞன் குடிபோதையில் வாடகைக்கு கார் ஒன்றை அமர்த்தினான். தொடர்ந்து அந்த இளைஞன் ஓட்டுநரிடம் பேசிக்கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் கோபமடைந்த காரின் ஓட்டுநர் புறநகர் பகுதியில் காரை நிறுத்தி, அந்த இளைஞரை வெளியே இழுத்து அலேக்காகத் தூக்கி வீசினார். பின்னர் தட்டுத் தடுமாற எழுந்த இளைஞன் மற்றொரு காரில் ஏறி வீட்டுக்குச் சென்றான்.