வெள்ளைப்படுதல், சிறு நீர் எரிச்சல், நாவறட்சி, விக்கல் என்பவற்றை குணப்படுத்தும் அற்புத மூலிகை செருப்படை!

0

கார்ப்புச் சுவையையும், செம்புச்சத்தும், தங்கச்சத்தும் நிறைந்த மூலிகை.உடல் வெப்பத்தை அதிகரித்து பலம் ஏற்ற கூடியது. மலம், சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும். சளியை முற்றிலும் குணப்படுத்தும்.

மெழுகு பூசினாற் போல இம்மூலிகை இருக்கும்.

சிரங்கு கட்டுபட செருப்படைச் சாறு, வெள்ளை வெங்காயச் சாறு, 30 மிலி உடன் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து வடிகட்டி காலையில் மட்டும் குடிக்க வேண்டும். 4 நாட்களில் சொறி சிரங்கு, படை அனைத்தும் குணமடையும்.

வெள்ளைப்படுதல், சிறு நீர் எரிச்சல் ஆகியவை குணமாக செருப்படை மூலிகையை சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து 20கிராம் அளவு நசுக்கி 4 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு 30 மிலி அளவாக தேவையான அளவில் பனை வெல்லம் சேர்த்து தினமும் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். ஒரு வாரத்தில் குணமடையலாம்.

நாவறட்சி, விக்கல் ஆகியவை தீர செருப்படை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக சுட்டு அவற்றின் சாம்பலைச் சம அளவாக ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மணிக்கு ஒரு முறை நாக்கில் தடவ வேண்டும்.

ரசவாதத்திற்கு ரசத்தை கட்ட தேவையான சுண்ணங்கள் பற்பங்கள், செந்தூரங்கள் செய்ய இம்மூலிகையை சுட்ட சாம்பல் அற்புதமான சுண்ணமாகும்.

விராலி இலைச்சாம்பலும் , செருப்படை இலைச்சாம்பலும் சேர்த்து காய்ச்சி எடுக்கின்ற உப்பினால் ரசமணிகளை சக்தியுடைய மணிகளாகவே கட்டலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் சில அறிகுறிகள்!
Next articleவாழை இலையில் சாப்பிடுவதன் பயன்கள்! வாரத்தில் இரு தடவையாவது பழக்கபடுத்துவோம்!