Home thatstamil one india tamil oneindia tamil வெளியானது பரபரப்பாக நடைபெறும் ஓட்டிங் லிஸ்ட் முன்னிலையில் இருப்பது இவர்தான்.. டைட்டிலை வெல்வாரா?

வெளியானது பரபரப்பாக நடைபெறும் ஓட்டிங் லிஸ்ட் முன்னிலையில் இருப்பது இவர்தான்.. டைட்டிலை வெல்வாரா?

0
692

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 100 வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் தர்ஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் இடம்பெற்றுள்ள சாண்டி, ஷெரின், லாஸ்லியா, முகெனில் இந்த வாரம் யார் அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என்று ரசிகர்கள் ஆவலாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இரண்டு நாட்கள் வாக்குகளில் முகென் முதலிடத்திலும், லாஸ்லியா இரண்டாவது இடத்திலும் முன்னணியில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.

எனவே ஆரம்பத்தில் மக்களின் அதிக ஆர்வம் தர்ஷன் மேலே இருந்து வந்தது. ஆனால் தர்ஷன் வெளியேறியதால், அவருக்கு அடுத்தப்படியாக முகென் தான் அவரை போலவே பல கஷ்டங்களை அனுபவித்து வருவதால் அவருக்கு மக்கள் வாக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் தர்ஷன் வெளியேறும் தருணத்தில் கூட மச்ச என்னுள் உன்னை பார்க்கிறேன் நீ வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதனாலேயே தர்ஷனின் ரசிகர்களும் முகெனின் பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால் இரண்டாவது இடத்தில் லாஸ்லியா வருவது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஒரு வேளை முகென் பிக்பாஸ் டைட்டிலை வென்று விட்டால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி மறக்க முடியாத நாளாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் முகென் தான் பினாலே டிக்கெட்டை வென்று பைனல் சென்றவர்.

கோல்டன் டிக்கெட்டை வென்றவர்கள் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல மாட்டார்கள் என்ற கணிப்பை தவிடுப்பொடியாக்குவாரா முகென் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.. எது எப்படி என்றாலும் யார் வெற்றி பெற வேண்டும் என்று பிக்பாஸின் கையில் தான் உள்ளது என்று நெட்டிசன்களின் குமுறலாக உள்ளது.

Previous articleகுழந்தை தொழிற்சாலை… ஒரே குடியிருப்பில் 19 கர்ப்பிணி பெண்கள்: வெளிவரும் கொடூர பின்னணி !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 03.10.2019