வெறும் 77 ரூபாயிக்கு விற்கப்படும் வீடு! வாய்பிளக்க வைக்கும் கண்டிஷன்ஸ்! அப்படி என்னவா இருக்கும்!

0
1261

சென்னைக்கு மிக அருகில் எனச் சொல்லி ஆளே இல்லாத இடங்களில், வீடுகளைக் காட்டி கிடைக்கும் பார்ட்டிகளை விற்க முயற்சிக்கும் சில விளம்பரதார ரியல் எஸ்டேட் அதிபர்களை வெகு இயல்பாக காண முடியும்.

ஆனால், அருகில் பள்ளி, பஸ் வசதி, ஏர்போர்ட், மார்க்கெட், திரையரங்க வசதிகள் இருந்தால் அந்த இடத்திக்கு மவுசே அதிகம்தான்.

எனினும் அந்த மாதிரியலான இடங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் விலையைச் சொல்லவே வேண்டும். உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு எமாறாமல் வாங்கினாலும் கூட குறைந்தபட்சத் தொகையே, ‘வீட்டை வாங்கிப் பார்’ என்கிற ரேஞ்சில்தான் இருக்கும்.

ஒருவேளை வீட்டுக் கடன், வங்கிக் கடன்களை பெற்றுக்கொண்டு இஎம்ஐ-யில் வாங்குபவர்கள் உண்டு. ஆனால் இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள மிஸம்லி நகருக்குட்பட்ட கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயருவோர்களின் கிராமப்புற வீடுகளை அரசே முன்வந்து 1 யூரோவுக்கு, அதாவது நம்மூர் பணத்தில் 77 ரூபாய்க்கு வீடுகளை விற்கும் செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால் வெறு 77 ரூபாய்தானே என்று அலட்சியமாக சென்றால் அவதிதான். காரணம் நோட்டரி, நிர்வாகக் கட்டணம், வருடாந்திர வீட்டுவரி, இதர வரிகள் என 3 லட்சம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

தவிர, இந்த வீடுகளை பாதுகாப்புக் கருதி கட்டாயமாக மறுகட்டமைப்பு செய்துதான் புழங்க வேண்டும் என்பது அரசின் நிபந்தனை.

அதையும் ஒரு வருட காலத்துக்குள் செய்ய வேண்டுமாம். இதனால் வீடு 1 யூரோதான். ஆனால் மற்றவைகளுக்கெல்லாம் சேர்த்து இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய் வரை செலவு ஆகலாம்.

இதேபோல் இந்த பகுதியில் 400 வீடுகள் உள்ளதாகவும், இந்த வீடுகளை வாங்குவதற்காகவே இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு புலம் பெயர்ந்து சொந்த வீட்டில், அமைதியாய், மாசுபடாத காற்றை சுவாசித்து, குறைந்த வாழ்வியல் செலவுகளுடன் வாழ விரும்பும் பலரும் இந்த வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 11.05.2019 Today rasi palan – 11.05.2019 !
Next articleஉங்கள் பிறந்த திகதியின் படி உங்கள் வீட்டில் பணமழை பொழிய என்ன செய்யணும் தெரியுமா! தீராத அதிர்ஷ்டமும், ஆசையும் நிச்சயம் நிறைவேறும்!