Home Patti Vaithiyam வெயில் காலத்தில் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்களுக்கு இயற்கையின் அருமருந்து!

வெயில் காலத்தில் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்களுக்கு இயற்கையின் அருமருந்து!

0
1048

வெயில் காலத்தில் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதலுக்கு இயற்கை வைத்தியம் கூறும் சிறந்த நிவாரணம் பற்றி காணலாம்.

கோடை காலத்தில் பெண்களை சிரமப்படுத்துகிற முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இதற்கு இயற்கை முறையில் பல்வேறு முறைகளில் தீர்வு காணலாம். அவற்றை பார்க்கலாம்.

வெந்தயத்தை ஊற வைத்து, அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு, வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

தண்டுக்கீரையின் தண்டுகளை மட்டும் சூப் வைத்து, ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் படிப்படியாக குணமடைவதோடு, இனப்பெருக்க உறுப்புகளும் பலமடையும்.

வெயில் காலங்களில் மதிய வேளையில் தினமும் ஒரு கப் வெள்ளைப் பூசணிச்சாறை குடித்து வாருங்கள்.

வேப்ப மரப்பட்டை மற்றும் சீரகத்தை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வெள்ளைப்படுதல் பிரச்சனை வரும்போதெல்லாம், இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து குளிர்ந்த நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டு கால் மணி நேரம் கழித்து தண்ணீரால் அலசி விடுங்கள். அந்த இடத்தில் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.

சோற்றுக் கற்றாழையின் சளி போன்ற சதையை நீரில் நன்கு அலசி மோருடன் அரைத்துக் குடித்தால், உடம்பின் சூடு தணிந்து, வெள்ளைப்படுதல் ஒரே நாளில் கட்டுக்குள் வரும்.

மேலும், சோற்றுக்கற்றாழை சதையை நீருடன் சேர்த்து அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டுவந்தால் உடற்சூடு கட்டுக்குள் வரும்.

Previous articleசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்…!
Next articleஅறிந்து கொள்ளுங்கள்! பயம் வேண்டாம்! பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவை!