வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்!

0
433

சீனாவில் வெட்டப்பட்ட தலையுடன் தெருவில் நடந்து சென்ற நபரை கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் தென்பகுதியில் அமைந்துள்ள Kangle கிராமத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று துப்புரவு தொழிலாளி ஒருவர் குப்பைத் தொட்டியில் பெண்ணின் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், அந்த தலையை கைப்பற்றியுள்ளதுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அப்போது நபர் ஒருவர் வெட்டப்பட்ட தலையுடன் தெருவில் மிக அமைதியாக நடந்து வருவதும், அருகாமையில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு வந்த தலையை வீசி செல்வதும் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 31 வயதான Zhang என்பவரை கைது செய்த பொலிசார், அவரது குடியிருப்பில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு தலை வெட்டி நீக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் ஒன்றை பொலிசார் கைப்பற்றினர்.

விசாரணையில், தமது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் கொண்டு அவரது தலையை வெட்டியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி குறித்த நபர் வெட்டப்பட்ட தலையுடன் தெருவில் நடந்து சென்றபோது எவரும் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவி! கணவனின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்!
Next articleஅமெரிக்க ஜனாதிபதியை போலத் தோற்றமளிக்கும் பெண்மணி! தீயாய் பரவும் புகைப்படம்!