வீட்டுக்குள் புகுந்து அலமாரியின் மேல் படுத்திருந்த கரடி! அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்! வைரல் காட்சி!

0
311

அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் கரடி ஒன்று வீட்டுக்குள் நுழைந்து படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கரடி ஒன்று காட்டிலிருந்து வீட்டுக்குப் பயணம் செய்ததில் களைப்போ என்னவோ, அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு அலமாரியின் மேல் படுத்திருந்தது…

மேலும் வீட்டினுள் இருக்கும் கரடியை மீட்க காவல்துறையினர் சென்றபோது அவர்களைப் பார்த்து அது கொட்டாவி விட்டது. இறுதியில் கரடிக்கு மயக்க ஊசி போட்டு அதை அங்கிருந்து அவர்கள் அகற்றினர்.

அந்த வட்டாரத்தில் வேறு இரண்டு வீடுகளுக்குள் கரடிகள் நுழைய முயன்றதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் கரடி புகாமல் இருக்க, கதவுகளைப் பத்திரமாகப் பூட்டி வைத்துக்கொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Previous articleபிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொள்ளும் அழகான இரு போட்டியாளர்கள்! புகைப்படத்துடன் இதோ!
Next articleலொட்டரியில் பல கோடிகள் கிடைத்ததாக கூறியதை நம்பிய பெண்! அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!