தினமும் காலை இதை செய்யுங்கள் வீட்டில் எப்பவுமே லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்!

0

சூரிய உதயத்திற்கு முன்பான விடியற்காலையினை உஷத்காலம் என சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

அவ்வேளையில் உஷஸ் என்னும் பெண் தேவதை நம் வீட்டிற்கு வாசம் செய்கிறார், இதனையே நாம் திருமகள் வருவதாக குறிப்பிடுகிறோம்.

எனவே அதிகாலையிலே விழித்தெழ வேண்டும். இந்த நேரத்தில் தூங்குபவன், எவ்வளவு செல்வ செழிப்புடன் இருந்தாலும் மகாலட்சுமி அவனை விட்டு விலகி விடுவார்.

இதனையே சீரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமகளின் தோற்றம்

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தப் போது அதில் வந்த பல்வேறு பொருள்களுடன் திருமகளும் வந்தார்.

திருமகளின் பெயர் மற்றும் வடிவங்கள்

திருமகளிற்கு பத்மா, பத்மப்பிரியா, பத்மசுந்தரி, கமலா, ஐஸ்வர்யா, பார்கவி, ஸ்ரீதேவி என பல பெயர்கள் உள்ளன.

திருமகள் வடிவம் அஷ்டலட்சுமிகளாக சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிலட்சுமி

தான்யலட்சுமி

தனலட்சுமி

தைரியலட்சுமி

சந்தானலட்சுமி

கஜலட்சுமி

விஜயலட்சுமி

வித்யாலட்சுமி

திருமகளுக்காக வரலட்சுமி நோன்பினைக் கடைப்பிடித்தால் நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

லட்சுமி கடாட்சத்தினைப் பெற

தினமும் விடியற்காலையில் எழுந்து, குளித்து விளக்கேற்றி, வலதுகையில் விளக்குடனும் இடதுகையில் ஊதுபத்தியுடனும் வாசலில் நின்று ”ஓம் ஸ்ரீ வாமேச ரிஷியெ நமஹ” எனும் மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும்.

வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்த்து, தினம் துளசிமாடத்தில் விளக்கு ஏற்றினால் திருமகள் வாசம் செய்வார்.

நம் வீட்டில் பணப்பெட்டியினை தென்மேற்கு திசையில் வைத்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அல்லது வடமேற்கு திசையில் வைத்து கிழக்கே பார்த்து அமைத்தால் பணவரவு கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் வழிபாடு!
Next articleபல மாணவிகள் பாதிப்பு! அதிர்ச்சித் தகவல்! மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து காணொளியாக வெளியிட்ட ஆசிரியர்கள்!