வீட்டில் உள்ள இந்த 10 பொருட்களில் பயங்கர அமானுஷ்ய சக்திகள் ஒளிந்துள்ளதாம்!

0

நம்மை சுற்றியுள்ள உலகம் சில சமயங்களில் அமானுஷ்ய வடிவில் நமக்கு தோன்ற கூடும். எதை பார்த்தாலும் அதில் ஏதோ ஒரு மர்மம் நீடித்திருக்கும். இது சிலருக்கு எப்போதாவது தோன்றும். சிலருக்கு நீண்ட நாட்களாக தோன்ற கூடும். இப்படிப்பட்ட விஷயங்கள் மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில் சற்று அதிக அளவில் உள்ளது என்றே சொல்லலாம்.

மூட நம்பிக்கைகள் என்கிற பெயரில் நம்மை சுற்றி வலம் வர கூடியவை இவை. சிலரை இது போன்ற நம்பிக்கைகள் நிம்மதியாக வாழ கூட விடாது. நமது வீடுகளில் இது போன்ற பல விஷயங்கள் உலவி கொண்டே இருக்கிறது.

சமையல் அறை முதல் வீட்டின் படுக்கை அறை வரை இப்படிப்பட்ட அமானுஷ்ய விஷயங்கள் நீண்ட காலமாக இருந்தே வருகிறது. அவை என்னென்ன என்பதையும், எதனால் இப்படி ஒரு மூடநம்பிக்கைகள் நம்மை சுற்றி வலம் வருகிறது என்பதையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் எங்கேயாவது உப்பு கொட்டி விட்டால் அதை மிகவும் மோசமான சகுனமாக எடுத்து கொள்வோம். சிலர் இதை ஏதாவது கெட்டது நடக்க போகிறதென்பதற்கான அறிகுறியாகவும் எடுத்து கொள்வர். மேலும், உப்பை வீட்டின் மூலைகளில் கொட்டி வைத்தால் அதனால் தீய சக்தி வராது எனவும் பலர் கருதுகின்றனர்.

மற்றவர்களின் கெட்ட கண்கள் நம் மீது படக்கூடாது என்பதற்கான சின்னமாக இதை பல வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். திருஷ்ட்டி சுற்றி போடுவதற்கான ஒரு உணவு பொருளாக இதை பயன்படுத்துகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்க முட்டாள்தனமான ஒன்றாகும்.

கிழக்கு இந்திய பகுதிகளில் இன்றளவும் மீனை மிக முக்கிய அதிர்ஷட பொருளாக நம்பி வருகின்றனர். எந்த ஒரு விஷயத்தை தொடங்குவதாக இருந்தாலும் மீனை சிறிது நேரம் உற்று நோக்கிய பின்னரே தொடங்குவார்களாம்.

வீட்டில் பால் கொட்டினால் அதை மிக பெரிய அபசகுணமாக எடுத்து கொள்கின்றனர். மேலும், இருள் சூழ்ந்த பின்னர் ஒரு வீட்டில் இருந்து பாலை கடனாக வாங்கினால் அது அந்த மாட்டின் பால் உற்பத்தியை குறைத்து விடும் என மூடத்தனமாக நம்பி வருகின்றனர்.

எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகிய இரண்டையும் சேர்த்து வீடுகளில் கட்டி வைத்தால் தீய சக்திகளின் பார்வை நம் மீது படவே படாது என பல காலமாக நம்பி வருகின்றனர். ஆனால், இப்படி ஒரு ஆற்றல் எலுமிச்சை மற்றும் மிளகாயிற்கு இல்லை என்பதே நிதர்சனம்.

வீடுகளில் தண்ணீர் வைத்து அமானுஷ்ய விஷியங்கள் உள்ளதா என்பதை சோதிக்கும் தன்மை கூட மிக பெரிய மூட நம்பிக்கையே. சிலர் நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து அதனால் தீய சக்திகள் உறிஞ்சப்படும் என நம்புகின்றனர்.

இது சற்று பழமை வாய்ந்த முறையாக கருதப்படுகிறது. அதாவது, நீண்ட தூரம் பயணம் செய்வோர் தனது கூடவே எண்ணெய் மற்றும் ஊறுகாய் எடுத்து செல்வது வழக்கம். எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்து கொள்ள இது உதவுகிறது என நம்பப்படுகிறது.

வீட்டின் முற்றத்தில் துளசி செடியை வைத்தால் வீடு முழுக்க நல்ல சக்தி குடிகொள்ளும் என பலர் நம்புகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்க தவறான கூற்றாகும். மருத்துவ குணங்கள் மட்டுமே துளசியில் உள்ளது. பலர் நினைப்பது போன்று தீய சக்திகளை விரட்டும் தன்மை இதற்கில்லை.

அதிர்ஷடத்தை தர கூடிய பொருட்களாக தயிரையும் சர்க்கரையையும் பார்க்கின்றனர். பரீட்சைக்கு செல்லும் போதோ அல்லது நேர்காணலுக்கு செல்லும் போதோ இந்த வகை இனிப்புகள் கொடுத்து அனுப்பினால் அதிர்ஷ்டம் அவர்களை கட்டி தழுவும் என நம்பப்படுகிறது.

வீட்டில் நெயை கொண்டு விளக்கு ஏற்றினால் எல்லா வித தீய சக்திகளும் விரட்டி அடிக்கப்படும் என நம்பப்படுகிறது. இதுவும் மிக தவறான பார்வையே ஆகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது!
Next articleசர்க்கரை நோய் இருக்கா! கண்ணை கவனிங்க!