விஷக்கடி, குதிகால் வலி, மார்பு சளி போன்ற பலவற்றை குணமாக்கும் எருக்கன் செடி !

0

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

”எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது”

என்கிறது, சித்தர்பாடல்.

ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள்.

இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் ‘ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஆதிமனிதனின் கயிறு: தென்னைநார்க் கயிறு,

ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம்.

ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள்.

இலவம் பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

விஷக்கடிக்கு மருந்து: இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது.

பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து… புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.

தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும்.

மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும்.

குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும்.

எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும்.

இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெப்டம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியான மாதமாக இருக்கும்!
Next articleஇன்றைய ராசி பலன் 02.09.2021 Today Rasi Palan 02-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!