விளையாட்டு கதைக்களத்தில் விஜய்க்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ் !

0

விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் தயாராகின்றன. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை வைத்து வெளியான கனா பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கிலும் இந்த படத்தை ரீமேக் செய்தனர்.


விஜய்யின் பிகில் பெண்கள் கால்பந்து விளையாட்டு கதை. இந்நிலையில், கீர்த்தி சுரேஷும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார்.இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். நாகேஷ் கூகுனூர் இயக்குகிறார். இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷ் கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறி இருக்கிறார். 

கதாபாத்திரத்துக்காக வீட்டிலும் பயிற்சி எடுத்து வந்தார். தற்போது படத்தில் வரும் கீர்த்தி சுரேசின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மேக்கப் இல்லாமல் இருக்கிறார். படம் முழுவதும் மேக்கப் இல்லாமலேயே நடிப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் பெண்குயின் என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். ஈஸ்வர் கார்த்தி இயக்குகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக-திகில் படமாக தயாராகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடிக்கிறார். பெண்குயின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan சனிக்கிழமை இன்றைய ராசிப்பலன் – 19.10.2019 !
Next article100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள் !