கோடை காலம் வந்துவிட்டது அதோடு சேர்ந்து வியர்வை துர்நாற்றமும் நம்மை ஆட்கொள்ளும். கவலை கொள்ள தேவையில்லை. கீழ்காணும் முறைகளை கடைபிடித்தாலே போதும்.
* 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் சில வாரங்கள் தொடர்ந்தாலே போதும்.
* ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து, அதை அக்குளில் தடவி சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
* ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சு உருண்டையில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2-3 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால் பல கிடைக்கும்.
* சிறிது ரோஸ் வாட்டரை அக்குளில் தடவலாம் அல்லது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து குளித்தால் துர்நாற்றம் நீங்கும்.
* தக்காளி கூழை நேரடியாக அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வர வேண்டும்.
* தினமும் குளிக்கும் முன், ஒரு துண்டு எலுமிச்சையை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.
* சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.