விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் விசேட பிரிவுகள்! குடு மாபியாக்களை வேட்டையாட 70 மோப்ப நாய்கள் களத்தில்!

0

போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் நோக்கில், கட்டுநாயக்க – விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பொலிஸ் மோப்ப நாய்களின் இரண்டு பிரிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மோப்ப நாய்கள் நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுவதுடன் அவற்றில் 70 நாய்களே, போதைப் பொருள் கடத்தல்களைச் சுற்றிவளைப்பதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 60 நாய்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொக்கெய்ன், ​ஹெரோயின் ஆகிய போதைப் பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காகவே, இந்த மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 70 பொலிஸ் மோப்ப நாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம், இரகசியமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருளைக் கைப்பற்றுவதற்கு முடியுமாக இருக்கும் என, மோப்ப நாய்கள் நடவடிக்கைப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, விரைவில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலும், மத்தள விமான நிலையத்திலும் பொலிஸ் மோப்ப நாய்களின் மூன்று பிரிவுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் போதை வில்லைகளைக்கைப்பற்றுவதற்காக, குறித்த நாய்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபுதேவாவின்மகன்களா இது! முதல் முறையாக வெளியிட்ட காணொளி!
Next articleஉல்லாசமாக இருந்த முக்கிய ஆசாமி சிக்கினார்! 200 பெண்களை மயக்கி தகாத படம்!