விமானத்தில் ஆப்பிளை சாப்பிடாமல் வைத்திருந்த பயணி: ரூ.30,000 அபராதம் விதித்ததால் அதிர்ச்சி!

0
846

பெண் பயணி ஒருவர் விமானத்தில் கொடுத்த ஆப்பிளை சாப்பிடாமல் பையில் வைத்திருந்ததால், அதிகாரிகள் அவருக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Crystal Tadlock என்ற பெண் பிரான்சின் பாரிசிலிருந்து அமெரிக்காவிற்கு Delta Air Lines விமானநிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றுள்ளார்.

விமானம் அமெரிக்காவின் Minneapolis பகுதியில் தரையிரக்கப்பட்ட பின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவரது கைப்பையில் ஆப்பிள் ஒன்று இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமானத்தில் கொடுத்த ஆப்பிளை எடுத்து வந்ததற்காக 33,000 அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர்.

இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அவர், இது தனக்கு சாப்பிட கொடுத்ததாகவும் மெதுவாக சாப்பிட்டுக் கொள்ளலாம் எனபதன் காரணமாகவே பையில் வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார்.

அதுமட்டுமின்றி நான் இதனை இப்பாதே சாப்பிட்டு விடுகிறேன் இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதிகாரிகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உறுதியாக கூறியதால், வேறு வழியின்றி அவர் அபராதம் கட்டிய பின் அங்கிருந்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனமோ, அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி எங்களது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது

Previous articleஜெனிவா பல்கலைக்கழகத்தின் பெருமையை உலகிற்கு உயர்த்திய ஈழத்து மாணவி!
Next articleதந்தை வயதுடைய நபர் மீது காதல்: 17 வயது சிறுமி செய்த மோசமான செயல்!