விபத்தில் சிக்கிய ரசிகர்களை காப்பாற்றிய நடிகர் விஜய்! தீயாய் பரவி வரும் காட்சி!

0

தன்னை காண படபடிப்பு தளத்திற்கு வந்த ரசிகர்களை, விபத்தில் இருந்து காப்பாற்றிய நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெறி, மெர்சல் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய்-அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. பெயரிடப்படதாக விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் வரும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படபிடிப்பு தளத்திற்கு தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு திடீர் விபத்து ஏற்பட, அதிலிருந்து ரசிகர்களை காப்பாற்ற நடிகர் விஜய் முற்படும் காட்சி வீடியோவாக தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

முன்னதாக தனது காரை பின் தொடர்ந்து வந்து ரசிகர்களை பார்த்து, பின்தொடர்ந்து வர வேண்டாம் என நடிகர் விஜய் ரசிகர்களிடம் அன்பு கட்டணை விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த இளைஞர்கள்! நேரலையில் இந்த தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசிய பிரபல நடிகை!
Next articleபொள்ளாச்சி சம்பவத்தில் 4 புதிய வீடியோ வெளியானது! வழக்கில் ஐந்தாவதாக சிக்கியுள்ள அந்த நபர் யார்!