விநாயகர் முன் தலையில் குட்டு போடும் பழக்கம் ஏன் வந்தது!

0

அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுவதும், தோப்புக்கரணம் போடுதல் போன்றவை நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.

ஆனால் அது எதற்காக என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா?

விநாயகர் முன் தலையில் குட்டு, தோப்புக்கரணம் போடுவது ஏன்?

முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கும்.

அந்த வகையில், தான் தலையில் குட்டு போடுவதும், தரையில் தோப்புக்கரணம் போடும் முறைகள் வழக்கத்தில் உள்ளது.

ஏனெனில் நமது காதுகளில் உள்ள 200 நரம்புகள் சீராக ரத்தல் செல்வதற்கும், புதிய ரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் இந்த வழக்க முறைகள் பெரிதும் உதவுகிறது.

எனவே தான் சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

முன்னோர்களின் ஆரோக்கிய பழக்கங்களில் சில..

ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும் பொழுது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி செய்தால், அன்றைய நாளில் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்குமாம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம்.

காலையில் எழுந்து முதலில் உள்ளங்கையைப் பார்த்த பின் பூமியைத் தொட்டு வணங்கி, அதன் பின் காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்படும் என்று கூறுகின்றார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் உங்களுக்கு என்ன நோய் என்று அறிந்து கொள்ளலாம்!
Next articleஇரவு 10.48 – 1.12 மணிக்குள்ளாக நாம் காணும் கனவு நல்லதா? இரவு 1.12- 3.36 மணிக்குள்ளாக காணும் கனவு நல்லதா?