விஜய்யுடன் படங்களில் நடிக்க பலருக்கும் விருப்பம் தான். அதிலும் அவருக்கு இணையான முக்கியமான கேரக்டர்களில் நடித்து அசத்தியவர்களும் இருக்கிறார்.
விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த பைரவா படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த ஜெகபதி பாபு. கல்வி நிறுவனைங்களை வைத்து மோசடி செய்து விஜய்யிடம் சிக்கிக்கொள்வார்.
லிங்கா, கத்தி சண்டை என சில படங்களில் ஜெகபதி நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவின் பிரபலம் நடிகரான இவர் ஹிந்தி, மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர்.
தற்போது ஹிந்தியில் Tanaji என்ற படத்தில் Tanajiயாக நடித்துவருகிறாராம். சமூகம் சார்ந்த முக்கிய கதையை மையமாக வைத்து படத்தை ஓம் ரௌத் இயக்கிவருகிறார்.
இப்படத்திற்காக தன் தோற்றத்தை அப்படியே மாற்றியிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவர் தான் இது என குழம்பியுள்ளனர்.





