வீட்டில் கண்ணாடியை வைக்க சில சரியான வாஸ்து டிப்ஸ்!

0

உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் வாஸ்துவில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்ணாடி. ஆம், இது முற்றிலும் உண்மையே. கண்ணாடியை எங்கே மாட்டப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம். இதை சொன்னால் யாருமே நம்ப தயாராக இருக்க போவதில்லை. இதை நீங்கள் நம்ப மறுப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியம் கிடையாது. ஆனால் கண்ணாடி என்பது உங்கள் வீட்டினில் இருக்கும் ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் நுழையும் நேர்மறையான ஆற்றல் சக்தி உங்கள் வீட்டில் கண்ணாடி மாட்டப்பட்டிருப்பதை அமைப்பை சார்ந்திருக்கும். அனைத்து கண்ணாடிகளும் அது மாட்டப்பட்டிருக்கும் இடங்களும் வாஸ்து படி இருக்கிறது என்று கூற முடியாது. நீங்கள் கண்ணாடியை பொருத்தியிருக்கும் சில முறைகள், உங்கள் வீட்டை நேர்மறையான ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும். ஆனால் கண்ணாடியை பொருத்தியிருக்கும் வேறு சில முறைகள், உங்கள் வீட்டை எதிர்மறையான ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும்.

வீட்டிற்கு புது கண்ணாடியை கொண்டு வருவதற்கு முன்பி சில அடிப்படையான டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றிடுங்கள். நாங்கள் கூறப்போவதை விட இன்னும் அதிகமான டிப்ஸ் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் நாங்கள் கூறப்போவது மிகவும் அடிப்படையானது. இதை தான் பெரும்பாலான கண்ணாடி வாஸ்து டிப்ஸ் கூறுகிறது.

வீட்டில் வைக்கப்படும் கண்ணாடிக்கான வாஸ்து டிப்ஸ்:

வீட்டில் வைக்கப்படும் கண்ணாடிக்கான வாஸ்து டிப்ஸ்: நீங்கள் வீட்டில் ஒரு கண்ணாடியை மாட்ட எண்ணுகிறீர்களா? அப்படியானால் கீழ்கூரியதை கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் படுக்கை பிரதிபலிப்பதை போல கண்ணாடியை மாட்டக் கூடாது. இதனால் அதிகமாக நோய்வாய் பட்டு எதிர்மறை ஆற்றலை பெறுவீர்கள்.

ஒரு வேலை உங்கள் தலைவாசல் கதவை பிரதிபலிப்பதை போல கண்ணாடி வைக்கப்பட்டிருந்தால் உங்கள் வீட்டிற்குள் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறனும் உள்ளேறும். அதே போல் உங்கள் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் சக்தி கொண்டுள்ள பொருட்களை நோக்கியே கண்ணாடியை வைத்திடுங்கள். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் நீங்கும் என்று வீட்டில் கண்ணாடி வைப்பதற்கான வாஸ்து கூறுகிறது.

அலுவலகத்தில் வைக்கப்படும் கண்ணாடிக்கான வாஸ்து டிப்ஸ்: நீங்கள் வேலை செய்யும் அலுவலக சூழ்நிலையில் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறன்களை கொண்டு வர வேண்டும். அவைகளை ஒன்றாக நிலைநிறுத்திட முயற்சிக்க வேண்டும். அதற்கு உங்கள் கண்ணாடி நேர்மறையான ஆற்றில் திறனை பிரதிபலிக்க வேண்டும். வளமையை கொண்டு வர உங்கள் கண்ணாடியை உங்களின் பண பெட்டகத்தை நோக்கி வைக்கலாம். குறுகிய பாதையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றல் திறனை அதிகரிக்கும்.

குறுகிய பாதையில் எதிர்மறை மற்றும் மூட்டமருட்சி சூழலை தான் கண்ணாடி பிரதிபலிக்கும். அதனால் அம்மாதிரியான இடத்தில் கண்ணாடியை வைக்காதீர்கள். நல்ல காட்சியையும் நேர்மறையான ஆற்றல் திறனையும் பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள ஜன்னலுக்கு எதிர்புறமாக ஒரு கண்ணாடியை வையுங்கள். இது உங்கள் அலுவலகத்தில் நேர்மறையான ஆற்றல் திறனை அதிகரிக்கும்.

கண்ணாடி வைப்பதற்கான பொதுவான வாஸ்து டிப்ஸ்: உங்கள் குளியலறையில் கண்ணாடி வைக்க விரும்பினால், வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்கவும். வீட்டின் நடுவே சுவர் இருந்தால், வீட்டை இணைப்பில் வைக்கும் விதமாக கண்ணாடி வைக்கலாம். இரண்டு கண்ணாடிகளை எதிரெதிரே கண்டிப்பாக வைக்க வேண்டாம்.

இது உங்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்துவதால் வாஸ்து சாஸ்திரம் இதை கண்டிப்பாக தவிர்க்க சொல்கிறது. குளியலறையை தவிர்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி கண்ணாடியை வைக்காதீர்கள். அது நேர்மறையான ஆற்றல்களை எடுத்துச் சென்று விடும். உங்கள் பிம்பம் பிரதிபலிக்குமாறு கண்ணாடியை வைக்காதீர்கள். அதே போல் தலைவாசல் கதவை பார்த்தவாறு கண்ணாடியை வைக்க கூடாது. கண்ணாடியை எங்கு வைக்கலாம், எங்கு வைக்கக்கூடாது என்பதற்கான சில டிப்ஸை தான் இதுவரை பார்த்தீர்கள். இவைகளை பின்பற்றினால் நேர்மறையான ஆற்றலை பெறுவது உறுதி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இத மட்டும் செய்யவே செய்யாதீங்க!
Next articleகுடும்பத் தலைவிகள் கண்டிப்பாக செய்யவே கூடாத தவறுகள்!