Home Patti Vaithiyam இதை சரியான நேரம் பண்ணுங்க கருத்தரிக்க இலகுவான வழி இதுதான்!

இதை சரியான நேரம் பண்ணுங்க கருத்தரிக்க இலகுவான வழி இதுதான்!

0
17214

தாய் நலம்: பலர் தங்களுக்கென ஒரு குழந்தையாவது பிறக்காத என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர். தம்பதியரின் மனதில் குழந்தைக்காக உருவான ஏக்கம் நாளடைவில் மனஅழுத்தமாக, வருத்தமாக மாறி அவர்களின் வாழ்வின் மகிழ்ச்சியை கெடுத்து விடும் அளவிற்கு வளர்ந்து விடுகிறது. கருத்தரிக்க சரியான நேரம் மற்றும் காலம், முறை அறிந்து செயல்படல் வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் அது தவறான பலனையே தரும்.

கருமுட்டையும் உட(லுறவு)றவும் ஆணும் பெண்ணும் உடலால் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக இணைவதால், கருத்தரிப்பு ஏற்படுகிறது. உட(லுறவை) சரியான நேரத்தில் செய்தால் எளிமையாக, விரைவில் கருத்தரிக்க முடியும்.

கருத்தரிக்க முக்கியத் தேவையாக இருப்பது பெண்ணின் அண்டம் மற்றும் ஆணின் விந்தணுக்கள். பெண்ணின் கருவறையில் அண்டம் ஆண் (வி)ந்துவிற்காக காத்திருந்து, இறந்து போய் வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். பெண்ணின் மாதவிடாய் தொடங்கிய நாளை நாள்-1 அதாவது முதல் நாளாக கணக்கில் கொண்டு, மாதவிடாய் முடிந்த பின் சரியாக ஏழாம் நாள் – நாள்-7 முதல் நாள்-20 வரை தொடர்ந்து காதலுடன் சரியாக உட(லுற)வு கொண்டு வந்தால், நீங்கள் கருத்தரித்து தாய்-தந்தை ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

கருத்தரிக்க முடியாமல் இருக்க காரணங்கள்:

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் கருத்தரிக்க முடியாது. எனவே, முடிந்த அளவிற்கு குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்த அல்லது குழந்தை பெற்று எடுக்கும் வரையாவது தவிர்த்து வைக்க முயலுங்கள்.

தம்பதியர் இருவரில் ஆணோ பெண்ணோ அதிகமான உடல் எடையை கொண்டிருந்தால், அதாவது உடல் கொண்டிருக்க வேண்டிய எடையை விட அதிகம் எடை கொண்டிருந்தால், அவர்கள் தாய்-தந்தை ஆவது சற்று கடினமான விஷயம். தகாத உணவு முறை தான் நீங்கள் அப்பா- அம்மா ஆவதை தடுக்கிறது.

Previous articleவேறொரு நபருடன் மகன் செய்த காரியம்… தானாக சென்று உயிரைவிட்ட தந்தை!
Next articleகுழந்தை பிறப்பை தமதப்படுதுவதால் உண்டாகும் பிரச்சனைகள்!