வாழைப்பழமும், முட்டையும் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நடக்கும்?
வாழைப்பழத்தை பொறுத்த வரை நிறைய விட்டமின்கள், தாதுக்கள், மாங்கனீஸ், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, கலோரிகள் போன்றவை நிறைந்துள்ளது.
அதேபோல் முட்டையிலும் விட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், மக்னீசியம், புரோட்டீன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை அதிக அளவில் உள்ளது.
இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்த்து உடற்பயிற்சி செய்வதற்கு முன் எடுத்து கொள்வது முற்றிலும் தவறு.
ஏனெனில் இந்த இரண்டிலும் கலோரி அதிகமாக உள்ளதால், செரிமானமின்மை, வயிறு கோளாறுகள் போன்றவை ஏற்படலாம்.
எனவே இதை உடற்பயிற்சிக்கு பின் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன் எடுத்து கொண்டால் நல்லது.
இந்த இரண்டு உணவுகளும் பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கி கருவுறுதலுக்கு உதவுகிறது.
கர்ப்ப கால முதல் பகுதியில் காலையில் எழுந்ததும் பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாந்தி போன்றவை வாழைப்பழம் சாப்பிடுவதால் சரியாகுகிறது.
முட்டையில் உள்ள கோலைன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். மேலும் தாய்மார்களின் மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த இரண்டு உணவுகளையும் எடுத்து கொண்டால் நல்ல பலனை பெறலாம்.
அதனால் முட்டையையும், வாழைப்பழத்தையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.