சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மக்களிடம் எத்தனை பெரிய சர்ச்சைகளை சந்தித்தது என எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.
எதிர்ப்புகளுக்கு நடுவே போய்க்கொண்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் தடைவிதிக்கப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மதுரை உயர் நீதிமன்றம் கிளை இதற்கு தடை விதித்துள்ளாக சொல்லப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சி தான்.
இந்நிலையில் லட்சுமி நிகழ்ச்சிக்கு தடை பற்றி விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அடுத்த படத்தில் நான் பிசியாக இருக்கிறேன். அதனால் தான் சமூகவலைதளம் பக்கம் வரவில்லை.
உங்கள் ஆதரவும், வாழ்த்துக்களும் தேவை. இது தற்காலிக தடை தான். நாங்கள் எங்கள் தரப்பு ஞாயங்களை புரியவைத்து வருகிறோம். ஆனால் எதுவும் விவாதம் செய்ய விரும்பவில்லை.
அதில் கவனம் செலுத்த போவதில்லை என கூறியிருக்கிறார்.