பேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி வருவதை தடுக்க என்ன செய்யலாம்?

0

சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளலாமல் வாந்தி வரும். பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது போன்ற ஆசைகள் இருக்கும்.

ஆனால், பேருந்தில் பயணித்தாலே மயக்கம், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அது என்றுமே கனவாகவே இருந்துவிடுகிறது. அதிலும், மலை பிரதேசத்துக்கு பேருந்தில் பயணிப்பது என்பது கெட்ட கனவு.

வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒருசில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

இதனை ஒரு நோயை போல பாவிக்க தேவையில்லை. லட்சகணக்காண பேருக்கு இதுபோன்ற விளைவுகள் இருக்கும். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்வது போன்றவை தேவையற்றவை. இதை எளிய வகையில் சரி செய்யலாம்.

# பயணத்துக்கு முன் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். புகை பிடித்தல், மதுபானம், காரமான மசாலா உணவுகள், மிகுந்த வாசனை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தி வாந்தியை உண்டாக்கும்.

# மிதமான உணவுகளையே உண்ண வேண்டும். அரைவயிறு சாப்பிட்டால் நல்லது.

# அசைவுகள் அதிகமில்லாத இருக்கைகளில் அமருங்கள். இது உங்களின் உடல் அசைவுகளை சமநிலையில் வைத்திருக்கும்.

# வாகனம் சென்றுகொண்டிருக்கும் எதிர் திசையில் உள்ள இருக்கைகளில் உட்காருவதை தவிருங்கள்.

# காரின் முன் இருக்கைகளில் அமர்ந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படாது.

# பயணம் செய்யும்போது புத்தகம் படிப்பது உபாதைகளை வலுபடுத்தும்.

# காரில் பயணிக்கும்போது சன்னல்களை திறந்து வையுங்கள். புத்துணர்ச்சியான காற்றை சுவாசியுங்கள்.

# இதேபோன்று பயண ஒவ்வாமை இருபவர்களோடு பயணம் செய்யாதீர்கள். இதுகுறித்து பயணம் செய்யும்போது பேசுவதை தவிர்க்க வேண்டும்.

# சிலருக்கு மருந்துகள் உட்கொள்வது கைக்கொடுக்கும். அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகலாம்.

# கை மருத்துவமாக, இஞ்சி, புளி, மாங்காய், எலுமிச்சை ஆகியவற்றை பயணத்தின்போது உடன் வைத்துக்கொள்ளலாம்.

Previous articleஇதை செய்யுங்கள்! கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது!
Next articleநீங்க எந்த ராசிக்காரர்? அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்!