வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி திருப்பங்கள்! சொந்த மகளையே துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை!

0

நைஜீரியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை ஒப்புக் கொண்ட தந்தை இப்போது திடீரென்று ஒப்புக் கொள்ளதால், இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நைஜீரியாவின் Benin நகரத்தை சேர்ந்தவர் Gift Alonge. 17 வயது சிறுமியான இவரை, அவரது 54 வயது தந்தை சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதால், கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டில் வைத்தே தந்தை கருகலைப்பு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தெரிய வர அவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி கர்ப்பமாகி 21 வாரம் ஆகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில் சிறுமியின் தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், கடந்த மாத விசாரணையின் போது திடீரென்று நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை, மகளின் கர்ப்பிற்கு நான் காரணமில்லை என்று கூறியுள்ளார்.

ஏனெனில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 16-ஆம் திகதி கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் இவர் இப்படி மாற்றி கூறுவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளது எனவும், அந்த விபத்து எப்படி ஏற்பட்டது? யார் எல்லாம் இருந்தார்கள் என அது தொடர்பான விசாரணையையும் மேற்கொள்ளும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் வரும் 14-ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமி இரண்டு முறை கர்ப்பமானதாகவும், இரண்டாவது முறையின் போது தான் இந்த சம்பவத்தை சிறுமி உறவினர்களிடம் கூறியுள்ளார் என்று மற்றொரு தகவல்கள் கூறுகின்றன.

சொந்த தந்தையே மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், சிறுமியின் தாய் எதுவும் பேச முடியாமல் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகத்திற்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெற இயற்கை எண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது!
Next articleசளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க! வைத்தியம் எட்டு!