வயிற்றுப் புண்ணால் அவதிப்பட்டு வந்த இளம்பெண்: பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
637

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 19 வயதேயான யுவதியின் வயிற்றில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கிராம் அளவுக்கு தலை முடி உருளையை அப்புறப்படுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த யுவதி அரியவகை உளவியல் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதன் தாக்கத்தால் அவர் மண், கரி உள்ளிட்ட பொருட்களை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் அவருக்கு குடல் புண் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து லுதியானாவில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோரால அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த வருண் சாக்கர் தலைமையிலான மருத்துவர்கள் குழு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

அவரது வயிற்றில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கிராம் அளவுக்கு தலை முடி உருளையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

குறித்த அறுவைசிகிச்சையானது மிகவும் சவால் நிறைந்தது எனவும், அந்த யுவதி மிகவும் பலவீனமாக இருந்தார் எனவும் மருத்துவர் மிலன் வர்மா தெரிவித்துள்ளார்.

அவருக்கு இருந்த உளவியல் பாதிப்பு காரணமாக, சொந்த கூந்தல் முடியை அவர் தின்று வந்தது மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

Previous articleஇன்றைய ராசி பலன் வியாழக்கிழமை – 19.09.2019
Next articleசரிந்த மேலாடையை கண்டுகொள்ளாமல் தலைகீழாக நின்ற மாளவிகா.. ஷாக்கான ரசிகர்கள் !