வயிறு வலியால் துடித்த பெண்! அறுவைசிகிச்சையில் எடுக்கப்பட்டது என்ன தெரியுமா!

0
714

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தின் புகழ்பெற்ற நிஜாம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில், 33 வயது பெண் ஒருவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் அவருக்கு வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்துள்ளது.

தொடர்ந்து வலி அதிகரித்து வந்ததன் காரணமாக தனக்கு ஆபரேஷன் செய்த நிஜாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் இரண்டு கத்திரிக்கோல்கள் இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆபரேஷனுக்கு பயன்படுத்திய கத்திரிக்கோல்களை மருத்துவர்கள் எடுக்க மறந்து விட்டுவிட்டது அப்போது தான் அவருக்கு தெரியவந்துள்ளது. மீண்டும் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு அந்த கத்திரிக்கோல்கள் அகற்றப்பட்டுள்ளது.

அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே போல மருத்துவத்துறையில் அலட்சியமாக செயல்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

Previous articleமாக்கந்துர மதுஷ் உள்ளிட்டவர்கள் தொடர்பில் துபாய் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
Next articleஅற்புதமான ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா! வியக்கும் ஆய்வாளர்கள்!