வயதுக்கு வந்த ஆண் – பெண் சேர்ந்து வாழ தடை இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

0

கேரளாவைச் சேர்ந்த 20 வயது பெண், துஷாரா, கடந்தாண்டு ஏப்ரலில் நந்தகுமார் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்தார்.

அப்போது, நந்தகுமார் வயது 20. இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, துஷாராவின் தந்தை, தன் மகளை நந்தகுமார் கடத்திச் சென்றதாகவும், சட்டப்படி 21 வயது பூர்த்தியாகாத நிலையில் திருமணம் செய்துள்ளதாகவும் மனுவில் கூறிஇருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துஷாரா – நந்தகுமார் திருமணத்தை ரத்து செய்து, தந்தையுடன் செல்லும்படி, துஷாராவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், துஷாரா, திருமண வயதான, 18ஐ கடந்து, 20 வயது பெண்ணாக உள்ளார்.

அவர், தனக்கு பிடித்தவருடன் வாழ்க்கை நடத்த, முழு சுதந்திரம் உள்ளது. அந்த ஆணுக்கு, 21 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. குடும்ப வன்முறை சட்டத்தில், பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில், தனக்கு பிடித்த, வயதுக்கு வந்த ஆணுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வயதுக்கு வந்த ஆண், பெண், திருமண வயது அடையாத பட்சத்தில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது. வயது வந்தோர், தங்களின் விருப்பங்களை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளவர்கள். இந்த சந்தர்ப்பத்தில், பெற்றோர் வேலையை, நீதிமன்றம் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகணவரும் மாமியாரும் சேர்ந்து செய்த மோசமான செயல்: உயிரை விட்ட புதுப்பெண்!
Next articleஅம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா? ஆடி போயிடுவிங்க…