Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal வயதான மாமியாரை அடித்து கொடுமை செய்த மருமகள்! நெஞ்சை பதற வைத்த செயல் – வைரலாகும்...

வயதான மாமியாரை அடித்து கொடுமை செய்த மருமகள்! நெஞ்சை பதற வைத்த செயல் – வைரலாகும் வீடியோ!

0
480

நம்மை சுற்றி சில இயற்கைக்கு முரணான மனிதாபிமானமற்ற செயல்கள் நடப்பதை காணும் போது நம் நெஞ்சங்களை பதற வைக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.

மகேந்திரகரில் நிவாஸ் நகர் கிராமத்தில் 88 வயதான மாமியாரை மருமகள் அடித்து கொடுமை செய்யும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஹரியான முதலமைச்சர் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் இது போன்ற சம்பவங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும்,மூதாட்டியை தாக்கிய அவரது மருமகளிற்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.இதையடுத்து தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்த காவல்துறையினர்,மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

விசாரணையில் அந்த அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அந்த மூதாட்டி மாதம் ரூ 30000 ஓய்வூதியம் வாங்குகிறாராம். ஒவ்வொரு மாதமும் மருமகள் அதை பிடுங்கி இப்படி கொடுமை செய்வது தெரியவந்துள்ளது.

Previous articleநான் மொடலிங் செய்யவில்லை நம்புங்கள்! சென்னையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த பெண் யார் தெரியுமா!
Next articleமூட்டு வலிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!