அவதானம்!! வம்சமே போய்விடும்!! மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா பிளாஸ்டிக் பாட்டில்? அதிர்ச்சி தகவல்!

0

நமது அன்றாட வாழ்வியல் முறையில் உணவுப் பொருட்கள் அடைத்து வைப்பதில் இருந்து, சாப்பிடுவது வரை, வீட்டு உபகரணங்களில் இருந்து பல வகைகளில் பிளாஸ்டிக் நம்மோடு உறவாடி வருகிறது. இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? இதுதான் பிரச்சனையே.

பெரும்பாலும் வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி நாம் சாப்பிட பயன்படுத்துவது பிளாஸ்டிக் உபகரணங்கள் தான். ஏன் பார்சல் கட்டுவதற்கு கூட வாழையிலை போய் பிளாஸ்டிக் காகிதங்களும், டப்பாக்களும் வந்துவிட்டன. கூடவே, ஆண், பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் வந்துவிட்டன.

ஆண்களுக்கு

ஆண்மை குறைபாடு, பெண்களுக்கு கருவுறுதல் என இருபாலரையும் பாதிக்கிறதாம், நம் வாழ்வில் ஒன்றென கலந்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு….

பி.பி.ஏ பி.பி.ஏ எனப்படுவது பைசெப்ஃனால் ஏ (Bisphenol A) என்பதன் சுருக்கம்.

இது நீங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பிளாஸ்டிக் உபகரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலந்திருக்கும் ஓர் இரசாயன மூலப்பொருள்.

வரலாறு கடந்த

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் இரசாயன பொருள் தான் இந்த பைசெப்ஃனால் ஏ. முதலில் மனிதர்களின் ஹார்மோன் செயல்பாட்டிற்கு இது இடையூறாக இருக்கின்றது என்று தான் அறிஞர்களால் கூறப்பட்டது.

எப்.டி.ஏ பிறகு

இந்த குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்காவின் எப்.டி.ஏ (Food and Drug Administration) துறையின் பார்வைக்கு எடுத்து செலப்பட்டது.

குழந்தைகள் பொருட்களுக்கு தடை பிறகு,

எப்.டி.ஏ, இதன் கலப்பு எந்த குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்ய கூறியது.

இன்றும் தயாரிப்பில் இருக்கிறது ஆயினும் கூட இதன் மாற்று கலப்புகள் பிளாஸ்டிக் உபகரணங்களில் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.

குழந்தை பேறு ஹார்மோன் பாதிப்பு

அபாயம் பி.பி.ஏ., கருவுறுதலை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் என்சைம்களை வலுவாக பாதிக்கும் தன்மையுடையது. இதனால், குழந்தை பேறு தடைப்படும் அபாயம் உள்ளது.

கருவுறுதலை முற்றிலும் பாதிக்கும்

நாள்பட இது, கருவுறுதலை முற்றிலும் பாதித்து, பின்னாளில் குழந்தை பாக்கியமே இல்லாதவாறு செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

கருப்பைகளுக்கு பாதிப்பு

இந்த பி.பி.ஏ., எனப்படும் இரசாயனம் பெண்களின் கருப்பைகளை பாதிக்கிறது, இதனால் தான், கருவுறுதல் தடைப்படுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி

வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் ஆராய்ச்சி,கர்ப்பமாக இருந்த ஓர் குரங்கிற்கு இரண்டாவது, மற்றும் மூன்றாவது மூன்று மாத சுழற்சியில் பி.பி.ஏ இரசாயனத்தின் வெளிப்பாட்டில் வைத்திருந்த போது, அதன் கருப்பையின் வலிமை குறைந்ததை கண்டறிந்தனர்.

பெண்களை வலுவாக பாதிக்கிறது

பி.பி.ஏ., மயிர்க்கால்கள் மற்றும் முட்டைக்குழியங்களையும் ( follicles and oocytes) வெகுவாக பாதிக்கிறதாம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதுக் குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆராய்ச்சியில்,

கருவுறுதல் குறைபாடு உள்ள பெண்களை சோதித்து பார்த்ததில், எட்டில் ஒரு பெண்ணின் சிறுநீர் பரிசோதனையில் பி.பி.ஏ., வின் பங்கு இருந்தது கண்டறியப்பட்டது.

மயிர்க்கால்களை குறைக்கும்

(follicles) உடலில் பி.பி.ஏ.,வின் பங்கு அதிகரிக்கும் போது மயிர்க்கால்களின் எண்ணிக்கை குறையும் என்றும், இதனால் கருவின் திறன் குறையும் என்றும் கூறப்படுகிறது.

Previous articleபொலிவான முகத்தைப் பெற இயற்கை முறையில் வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி? இதோ உங்களிற்காக!
Next articleயாழில் இறுதி சடங்கில் ஏற்பட்ட கத்தி குத்தில்! ஐவர் படுகாயம்