லண்டனில் உள்ள தமிழர்கள் கவனத்திற்கு இதோ பெரும் ஆபத்து வருகிறது!

0
524

லண்டனில் உள்ள தமிழர்கள் கவனத்திற்கு இதோ பெரும் ஆபத்து வருகிறது!. அக்டோபர் 30ம் திகதியோடு லண்டனில் உள்ள பல நூறு தெருக்களில், இனி நீங்கள் இதனைப் போன்ற கமராவை தான் பார்ப்பீர்கள்.

இது வேகக் கட்டுப்பாட்டு கமரா மட்டும் அல்ல. பல விடையங்களை இது நோட்டம் இட உள்ளது என்பது பலருக்கு தெரியாது.

எனவே நிச்சயம் இதனைப் படியுங்கள். முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். கீளே உள்ள பேஸ் புக் பட்டனை அழுத்தி உங்கள் முக நூலில் பதிவு செய்யுங்கள்.

லண்டனில் 4ம் தலை முறை வேகக் கட்டுப்பாட்டு கமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இது மிக விரைவாக செல்லும் வாகனங்களை படம் எடுத்து அனுப்புவதோடு. வேறு பல லீலைகளையும் புரிய வல்லது.

குறிப்பாக காரின் உள்ளே உள்ள நபர் என்ன செய்கிறார் என்பதனை இந்த கமராக்கள் துல்லியமாக நோட்டமிட வல்லவை.

நீங்கள் வாகனத்தை ஓட்டும் வேளை கையில் மோபைல் போனை வைத்திருந்தால் போதும். உடனே படம் எடுத்து பொலிசாருக்கு அனுப்பிவிடும்.

மோபைல் போனில் பேசினாலும், இல்லையென்றால் வாட்ஸ் அப் அல்லது வைப்பரை பார்த்தால் கூட இது படம் எடுத்துவிடும்.

இது போக மேலும் ஒரு ஆப்பு உள்ளது. நீங்கள் சீட் பெலிட்(ஆசனப் பட்டி) போடவில்லை என்றாலும் உடனே படம் எடுத்து விடுகிறது.

எனவே இனி ஸ்பீட் கமராவை கண்டதும் வேகத்தை குறைக்கிறோம் நாம் தப்பிவிட்டோம் என்று மட்டும் நினைக்கவேண்டாம். பல ஆபத்துகள் காத்திருக்கிறது.

மோபைல் போனை கையில் வைத்திருந்தாலே உங்கள் லைசன்சில் 6 புள்ளிகள் வெட்டப்படும். எனவே தமிழர்கள் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.

Previous articleஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை!
Next articleசாதம் வடிச்ச கஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!