ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

0

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் வானிலை தொடர்பில் மக்களை அவதானமாக செயற்படுமாறு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியில் இருந்து இத்தகைய வானிலை காணப்படுகின்றமையால், ரொறன்ரோ ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

காற்று மணித்தியாலத்திற்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதோடு, ஆலங்கட்டி மற்றும் கன மழை பெய்து வருகின்றது.

இதனால் வீதிகளில் மற்றும் மின்கம்பங்களில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் மின்சாரமும் தடைபட்டுள்ளதுடன் வீதிகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இடிமுழக்கம் இன்று மாலை 5.45 மணி வரை நீடிக்கும் என தெரிவித்த சுற்றுச்சூழல் திணைக்களம் மக்களை, இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவித்துள்ளது.

Previous articleவலி இல்லாத கட்டிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!காரணம் புற்றுநோயா?
Next article28.07.2018 இன்றைய ராசிப்பலன் – சனிக்கிழமை!