ரூ. 4442 கோடியுடன் முதல் நாள் ஏலம்! மிரள வைக்கும் பிசிசிஐ!

0
411

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக முதல் நாள் இ-ஏலம் ரூ. 4442 கோடியுடன் முடிவடைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிகள் அடுத்த ஐந்து ஆண்டுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலம் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்க ஸ்டார், சோனி, பேஸ்புக், கூகுள், யப் டிவி, ஜியோ உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் இந்த சர்வதேச ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் முதல் முறையாக வெளிப்படையாக இணையதளம் மூலமாக இ-ஏலமாக நடத்தப்பட்டது

அதிக தொகைக்கு எந்த நிறுவனம் ஏலம் எடுக்கிறதோ, அந்நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்து கொள்ளும். அதன்படி, இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்ப கடைசியாக ஸ்டார் நிறுவனம் கடந்த 2012ல் ரூ. 3851 கோடி ஏலம் எடுத்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இ-ஏலத்தில் ஆரம்ப தொகையாக ரூ. 4176 கோடி கேட்கப்பட்டது.

இது அப்படியே அதிகரித்து முதல் நாள் முடிவில் அதிகபட்சமாக ரூ. 4442 கோடியில் நின்றது.

இந்த இ-ஏலம் இன்று 11 மணிக்கு தொடரவுள்ள நிலையில் இறுதி ஏலத்தொகை மற்றும் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம் குறித்து இன்றே அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Previous articleபாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை!
Next articleதசை நார்கள் முழங்கால் வலிக்கு விடுதலை! அற்புத பானம்!