உடலுக்குள் கிருமிகள் அல்லது சம்பந்தமில்லாத ஏதாவது பொருள் புகுந்துவிட்டால் வெள்ளையணுக்கள் அவற்றை கண்டறிந்து அவற்றுடன் போராடி வெளியே அனுப்பும். இதுதான் வெள்ளையணுக்களின் வேலை. சிப்பாய் என்று சொல்லலாம். இந்த வெள்ளையணுக்கள் அதிகரித்தால் நல்லதுதானே. இதனால் கிருமிகள் உடலில் தொற்றாது என நீங்கள் நினைத்தால் தவறு.
அது மட்டும் காரணமிருக்காது. வேறு ஏதாவது உடலில் நோய்கள் உண்டானாலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு என்ன காரணங்கள் இதற்கு காரணம் என பார்க்கலாமா?
எப்படி கண்டறியலாம்!
இதனை ரத்த பரிசோதனையில் மட்டுமே கண்டறியக் கூடும். பொதுவாக 4000-10500 மைக்ரோலிட்டர் ரத்தத்தில் இருந்தால் அது சாதரணமானது. அதைத் தாண்டி மிக அதிகமாக 14,000 த்திற்மு மேல் கூடினால் அது வேறு ஏதோ பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதற்கான காரணங்கள் பார்க்கலாம்.
தொற்று!
உடலில் பேக்டீரியா, வைரஸ் ஆகியவை ஊடியிருந்தால் அல்லது அறுவை கிசிக்சையில் உள்ளே இரும்பு பொருட்கள் பொருத்தினால் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.
புகை!
COPD எனப்படும் நாள்பட்ட நுரையீரல் நோயினாலும் ரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும். அதற்கு புகைப்பிடிப்பதும் காரணமாகும். உங்கள் நுரையீரலில் புகையினால் உண்டாகும் பாதிப்பினால் எலும்பு மஜ்ஜையில் வெள்ளையணுக்கள் அதிகரித்து ரத்தத்தில் அதிகரிக்கும்.
லுகீமியா!
ரத்தப் புற்று நோயான லுகீமியாவினாலும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.
தனிச்சை நோய் எதிர்ப்பு நோய்!
கிருமிகள்தான் என்றில்லை. தனது உள்ளுறுப்புகளையே வேற்று பொருளாக பாவித்து நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு அந்த இடத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கும். இது உடலில் உண்டாகும் ஒரு வகை கோளாறு. இதனால் வெள்ளையணுக்கள் இருமடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும்.
மன அழுத்தம்!
மன அழுத்தத்தாலும் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும் என்பது தெரியுமா? இதில் நல்ல விஷய்ம் என்னவென்றால் மன அழுத்தம் குறைந்ததும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.




