ரத்தத்தில் ஏற்படுகிற ரத்த உறைவுப் பிரச்சனையை தீர்க்கும் அன்னாசிப் பழம்!

0

நம் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பு மற்றும் இன்ன பிற சத்துக்கள் ரத்த நாளங்களில் அதாவது ரத்தம் செல்லுகிற பாதைகளில் படிய ஆரம்பிக்கும். ரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருந்தால் அந்தப் பகுதிகளில் கடந்து செல்கையில் சிரமங்கள் ஏற்படலாம்.

சிலருக்கு ரத்த ஓட்டமே இல்லாது பாதிப்பினை உண்டாக்கும். இதயப் பிரச்சனை இருப்பவர்களுக்கு ரத்ததின் அடர்தியை குறைப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.

அடர்த்தியின் அளவினைக் குறைப்பதால் அது ரத்த உறைவுப் பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்கும் இதைத் தவிர துரிதமான ரத்த ஓட்டத்தினை உண்டாக்கும். ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

பூண்டினை அதிகமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர பெர்ரி, அவகேடோ, மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக இஞ்சியை நோயெதிர்ப்பு சக்திக்காக தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதையும் தாண்டி இஞ்சி ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க பெரிதும் உதவிடுகிறது.

அதோடு ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்த உதவுவதால் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு பட்டைத் தூளைப் போட்டு கொதிக்க வைத்திடுங்கள். பின் அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் குடித்திடுங்கள். தொடர்ந்து அதிக நாட்களுக்கு குடிப்பதினால் கல்லீரல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் நிறைந்திருக்கிறது, இவை உங்கள் ரத்தத்தில் ஏற்படுகிற ரத்த உறைவுப் பிரச்சனையை தீர்க்கும். அதோடு ரத்தத்தின் அடர்த்தியை கட்டுக்குள் கொண்டிருக்கும். அதோடு இதிலிருக்கும் அமிலத்தன்மை நல்ல செரிமானத்தை வழங்கக்கூடியது.

திராட்சையில் அதிகப்படியான ஃப்லேவனாய்டுகள் இருக்கின்றன. இதைத் தவிர கெம்ப்ஃபோரல்,க்வர்செட்டின் மற்றும் மைசெடின் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இவையெல்லாம் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடியது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleநினைத்ததை முடிக்கும் 3ம் எண் காரர்கள்!