ரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன?

0

ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாத செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலக மக்களிடையே பெரும் புகழ் பெற்றார்.

பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து 3வது இடத்தினைப் பெற்றார். தற்போது வெற்றிக்கொண்டாட்டத்தினை முடித்த லொஸ்லியா அவரது தாய்நாடான இலங்கைக்கு சென்றுள்ளார்.

வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் லொஸ்லியாவின் புகைப்படத்தினை வரைந்து கொடுத்து அவருடன் காணொளி எடுத்துள்ளார்.

விரைவில் லொஸ்லியாவிற்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், செய்தியாளர்களிடம் லொஸ்லியா பேசியுள்ளார்.

இலங்கை விமான நிலையத்தில் அவரை வரவேற்க பெரும் கூட்டம் காத்திருந்ததோடு அaவருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து லொஸ்லியா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தைத் தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக என்னை பெரிய அளவில் யாருக்கும் தெரியாது.

தற்போது இந்நிகழ்ச்சியின் மூலமாக பெரும் புகழை அடைந்திருக்கிறேன். அதற்காக ரசிகர்களுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

Liya ?? sweet heart ?@losliyamariya96 @kavin.0431

A post shared by ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? (@losliya.kavin.fans2.0) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாயமான அம்மா பகவான்! 2 நாளில் 500 கோடி பறிமுதல் ! கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு!
Next articleபெண்கள் மருதாணி வைக்கும்போது அதன் நிறம் இப்படி வந்தால் என்ன அர்த்தம்!