யாழில் யுவதி தற்கொலை! வழக்கில் சிக்கிய சட்டதாரணியை விசாரிக்க சி.ஐ.டிக்கு உத்தரவு!

0

இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர் என சட்டத்தரணி அற்புதராஜ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை இன்று வழங்கினார்.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாகேஸ்வரன் கௌசிகா (வயது -23) என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.

யாழ்ப்பாணம் மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் யாரும் இல்லாத வேளை தூக்குமாட்டி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் இளம் பெண் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் மீட்டனர்.

இளம் பெண் கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் குடும்ப வறுமை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை. இந்த யுவதியின் தந்தையும் மாற்றுத்திறனாளி. நீண்ட பல வருடங்களாக அந்த குடும்பம் வருமானமின்றி இருந்தது.

இந்நிலையில் யாழ் மாவட்ட விழப்புலனற்றவர் சங்கத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு வெறுமு் மூவாயிரம் ரூபா மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது. பின்னர் மக்கள் வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தபோது, 19 இலட்சம் ரூபாவை காணவில்லையென யுவதி மீது பழிசுமத்தி அவரது அடையாள அட்டையையும், வங்கி நியமன கடிதத்தையும் சட்டத்தரணி பறித்தெடுத்திருந்தார்.

அவரது தொல்லை தாங்க முடியாத கௌசிகா, அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக அற்புதராஜின் செயற்படுபவர்தான் தனது சாவுக்கு காரணம் என குறிப்பிட்டு கடிதம் எழுத வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

“பல்லேறு ஊழல் தொடர்பான விடயங்களில் அந்த சட்டத்தரணி என்னை கட்டாயப்படுத்தி வந்ததார். பெரும் தொகையான பணத்தை நான் திருடிவிட்டதாக தெரிவித்து என்னை அச்சுறுத்தினார். எனவேதான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்“ என்று இளம் பெண் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இளம் பெண்ணின் குற்றச்சாட்டுத் தொடர்பில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இளம் பெண்ணின் தற்கொலை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தோன்றி விசாரணை அறிக்கையை முன்வைத்தார்.

இளம் பெண்ணின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்றும் அவை தொடர்பில் உண்மைத் தன்மை இல்லை எனவும் பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டது.

அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் மன்று அதிருந்தியடைந்தது. உரிவாறு விசாரணை நடத்தப்படவில்லை என்று பொலிஸ் பொறுப்பதிகாரியை மன்று கண்டித்தது.

“இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் மன்று அதிருப்தி கொளகிறது. இளம் பெண்ணால் சட்டத்தரணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டு வழக்கை முன்னெடுக்குமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது“ என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி்ன்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநயன்தாரா, காஜல், சமந்தா பற்றி அதிரடி விஷயத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி- பகீர் தகவல்!
Next articleஅனுஷ்கா படங்களில் நடிக்காததற்கு உண்மை காரணம் இதுதானாம்!