கட்டை விரலில் மோதிரம் அணியக்கூடாது ஏன்?

0

உலோகத்திற்கு ஒருவித உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உள்ளது. அதற்கென்று சில குணங்கள் உள்ளன. அவற்றால் நம் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும். அதனாலேயே அவற்றை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நாம் பயன்படுத்துகிறோம்.

கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும்.

அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.
கட்டை விரலில் மோதிரம் அணிவதால், உங்களால் கையாள இயலாத, குறிப்பிட்ட விதமான சக்திகளை உங்களை நோக்கி நீங்கள் ஈர்க்கும்படி நேரும்.

உங்களை அது உலுக்கிப் போடலாம். நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும்.
அதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம்.

குறிப்பாக, நீங்கள் கட்டைவிரலில் மோதிரம் அணிந்திருந்தால், நீங்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அதனாலேயே மோதிர விரலில் மட்டுமே மோதிரம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் என்று தெரியுமா?அதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்!
Next articleமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க உங்களை தேடி வறுமை வரும்!