மொபைல் அதிக நேரம் உபயோகித்தால் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வரக் கூடும்!-ஆய்வு!

0
444

இப்போது பிறந்த குழந்தை கூட மொபைல் உபயோகிக்கின்றது. ,மொபைல், லேப்டாப் போன்ற மின் சாதனங்களால் கண், மூளை வளர்ச்சி பாதிக்கும் என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம்தான். ஆனால் என்ன சொன்னாலும் இந்த காதில் கேட்டு அந்த காதில் விட முடியாதபடி மொபைல் வைத்தக் கொள்கிறோம். எப்போதும் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள் என 24 மணி நேரமும் மொபைலை குனிந்து பார்த்தபடியேதான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், படுக்கிறோம்.

ஆனால் இவைகளை தொடர்ந்து உபயோகித்தபடியிருந்தால், முதுமைதோற்றம் இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து குனிந்தபடி மொபல் அல்லது லேப்டாப் பார்த்தபடி இருந்தால், சருமம் தொங்க ஆரம்பித்துவிடும். கண்களுக்கு அடியில் சதைப்பை ஆரம்பிக்கும். சுருக்கங்கள் இளம் வயதிலேயே மெல்லிய கோடுகளாய் விழுந்துவிடும்.

குனிந்தபடியே பார்ப்பதால், கழுத்து, முதுகு, மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வலிகள் ஆரம்பித்து, தசைகளில் இறுக்கமான நிலை தோன்றி அடுத்து எலும்புகள் பாதிக்க ஆரம்பிக்கும் என அச்சுறுத்துகின்றார் மும்பையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உள்ள வினோத் ஜி என்ற காஸ்மெடிக் நிபுணர் கூறுகின்றார்.

இன்டர்னெட் மற்றும் மொபைல் அஸோஸியேஷன் இந்தியா (IAMAI) கூறுவது என்னவென்றால், ஜூன் 2016 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 371 மில்லியன் மக்கள் மொபைலை உபயோகிக்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் அதிகம் உபயோகிப்பது , 19-30 வரை உள்ள இளம் வயதினர்.

மொபைலால் உண்டாகும் உடல் பிரச்சனைகள் ;
விரல்களில் உள்ள மூட்டுகளின் இணைப்புகள் பலவீனமாகிவிடும். விரல்கள் , முழங்கைகளின் வீக்கம் உண்டாகும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கும். தலைவலி, கண்பார்வை போன்றவை பாதிக்கும்.

இது தவிர்த்து, குனிந்து கொண்டிருக்கும் போது, கழுத்துத் தசைகள், ஈர்ப்புத்தன்மையால் முகத்திலுள்ள தசைகளையும் சருமத்தையும் இழுக்கும். இதனால் சருமத்தில் தொய்வு ஏற்படும். இரட்டை நாடி, கண்களுக்கு அடியில் சதை தொங்குதல் என இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் பெறுவீர்கள் என கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.

இந்த எல்லா பிரச்சனைகளையும் சேர்த்து பாதிக்கப்படும்போது இதனை மருத்துவ குறிப்பில், ” ஸ்மார்ட் ஃபோன் ஃபேஸ் ” என்று கூறுகின்றனர்.

Previous articleஉங்கள் படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாமலிருக்கிறீர்களா! இதப்படியுங்க!
Next articleபுளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்!