மைத்திரியின் மகளின் அதிரடி முடிவு! தந்தையை கைவிட்டு மஹிந்தவுடன்!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் சத்துரிக்கா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமை வழங்கும் பொதுஜன பெரமுன கட்சியின் இணைந்து சத்துரிக்கா சிறிசேன போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களை அடிப்படையாக கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சத்துரிக்காவின் ஆலோசகரின் அறிவுரைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இம்முறை போட்டியிடும் உறுப்பினர்கள் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுவதாக ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதினால் ஜனாதிபதி மற்றும் மஹிந்தவுக்கு இடையில் அரசியல் கூட்டணியை வலுப்படுத்தி கொள்ள முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களே ஜனாதிபதியை புறுக்கணிக்கும் நிலைமைக்குள் அவர் தனிமைப்படுத்தப்படுவதனை தடுக்க எடுக்க வேண்டும். ஆனாலும் அவருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள குற்றப் பிரேரணையை தடுப்பதற்கானவும், இந்த நடவடிக்கை முக்கியம் என சத்திரிக்காவிடம் அவரது ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் ராஜபக்ச தரப்பில் சிறப்பான பதில் ஒன்று கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்!
Next articleஅதிரடி நடவடிக்கையில் சந்திரிக்கா! ஆபத்தான கட்டத்தில் சுதந்திர கட்சி!