மேஷ ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள் ராஜயோகம் விரைவில் உங்களை தேடி வரும் காலம்!

0

குரு பெயர்ச்சி 2021 பிலவ வருடம் ஐப்பசி 27ம் தேதி (நவம்பர் 13), சனிக்கிழமை அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

இந்த சஞ்சாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகுது என்று பார்ப்போம்.

முழுப்பலன்கள்

மேஷ ராசிக்கு 9, 12ம் வீட்டு அதிபதியான குரு பகவான் 11ம் இடமான லாப ஸ்தானம், மூத்த சகோதரர் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது மிகப்பெரிய யோகமாகும்.

இதனால் உங்கள் தந்தை மூலமாக அனுகூலமான பலனும், சொத்துக்கள், நற்பெயர் கிடைத்தல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களின் குல தெய்வ வழிபாடு அடிக்கடி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.

பொதுவாக 9ம் வீட்டு அதிபதி 11ம் வீட்டில் அமர்வது சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் குருவே அமர்வதால் உங்களுக்குப் பெயர், புகழ் கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை மேஷ ராசிக்கு 5, 7, 9 இடங்களான முறையே மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகள் மீது விழுகின்றன. அதாவது மேஷ ராசிக்கு 3, 5, 7ம் இடம் ஆகிய இடங்களில் விழுவதால் மேஷ ராசிக்கு மிக சிறந்த மாற்றங்கள் உண்டாகும்.

அதுமட்டுமில்லாமல் குருவின் மிக சிறப்பான 9ம் பார்வை மேஷ ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானம் மீது குருவின் பார்வை விழுகிறது. இதுவரை சனி பகவானின் பார்வை தனியாக இந்த இடத்தில் இருந்தது. தற்போது குருவின் பார்வையும் விழுவதால், மேஷ ராசிக்கு சுப காரியங்கள் கை கூடும். திருமணம் முயற்சியில் இருப்பவர்களுக்கு விரைவில் வரன் அமையும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

குருவின் 5ம் பார்வை புதன் ஆளக்கூடிய மிதுன ராசி மீது விழுவதால், எழுத்து துறை, கலைத் துறையில் இருக்கும் மேஷ ராசிக்கு, சிறு முயற்சிகளுக்கு நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். அதோடு உங்களின் வீரிய ஸ்தானம் மீது குரு பார்வை உள்ளதால், உங்களின் முயற்சிகள் அதிகமாகும். அதனால் உங்களின் முயற்சிக்கேற்ப முன்னேற்றமும் அதிகமாக இருக்கும்.

மேஷ ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதும், கர்ம ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதாலும், குருவின் பார்வை தைரிய, வீரிய, முயற்சி ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது புத்திர காரகன் குருவின் பார்வை விழுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

குரு பகவான் இதுவரை 10ம் இடமான கர்ம ஸ்தானத்தில் இருந்தாலும், மேஷ ராசிக்கு 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்க்கவில்லை. அவர் சனியுடன் சேர்ந்திருந்த போது பார்வை பலன் இதன் மீது இல்லாததால், மகரத்தில் குரு இருந்த போது செய்ய முடியாத விஷயங்கள் எல்லாம், இந்த குரு பெயர்ச்சியில் செய்ய ஆற்றல் தருவார். குரு மற்றும் சனியின் பார்வை மேஷ ராசிக்கு 7ம் இடத்தின் மீது பார்வை செய்வதால், உங்களின் கூட்டு தொழில் நல்ல வாய்ப்பு உண்டாகும், முயற்சியும் எடுப்பீர்கள். சனி 10ல் இருப்பதால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

​கவனமாக இருக்க வேண்டியவை

மார்ச் மாதம் ராகு – கேது பெயர்ச்சி ஆகும் வரை கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மேஷ ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2ல் ராகு நீச்சம் பெற்று இருப்பதால் உங்கள் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். சிந்தித்து, நிதானமாகப் பேசுங்கள். படபடப்பாக, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதால் பிரச்னைகள் தான் ஏற்படும்.

அதனால் யோசனை செய்து எதையும் செய்வதாலும், மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் உங்களுக்கு வெற்றி பெறக்கூடியதான அமைப்பு உண்டாகும்.

Previous article12 ராசியினருக்கும் நவராத்திரி 2021 காலப்பகுதி எப்படி இருக்கப்போகிறது! பணவரவு அதிகமாக கிடைக்கும் ராசிக்காரர் யார்!
Next articleஇன்றைய ராசி பலன் 13.10.2021 Today Rasi Palan 13-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!