உலக அளவில் புகழ் பெற்றாலும் பிரித்தானிய இளவரசி டயானாவின் வாழ்க்கையின் பெரும்பகுதி ஏமாற்றத்திலேயே கழிந்தது.
ஒரு நல்ல மண வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றத்தைத்தான் அளித்தது.
ஒரு நல்ல கணவனுக்காக ஏங்கிய அவருக்கு சார்லஸும் ஏமாற்றத்தையே அளித்தார்.
இரண்டு மகன்களுக்குத் தாயாகினாலும் ஒரு பெண் குழந்தைக்கு ஏங்கினார், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மண வாழ்க்கை கசந்த பிறகும்கூட மூன்றாவது ஒரு குழந்தை பிறந்திருந்தால் அவர்களது மண வாழ்வு சிதைந்திருக்காது என்று கூட அவர் எண்ணியதுண்டு.
நேற்று இளவரசர் வில்லியமுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தபோது மூன்று குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை அவரது முதல் மகன் மூலமாகவே நிறைவேறியதை எண்ணி டயானாவின் நண்பர்கள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தனர்.
டயானா உயிருடன் இருந்திருந்தால் அவரது கனவுகள் ஒவ்வொன்றாய் தனது பிள்ளைகள் மூலமாகவே நிறைவேறுவதை எண்ணி நிச்சயம் மகிழ்ந்திருப்பார்.
அடுத்த மாதம் ஹரி, மெர்க்கலை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
அதுவும் டயானாவின் கனவுகளில் ஒன்று, ஒரு கலப்பினக் குழந்தை வேண்டும் என்பது.
சார்லஸுடனான வாழ்வை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சிகளெல்லாம் தோற்றுப்போனபோது, அவர் காதலிக்க தொடங்கியிருந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான ஹன்சத் கானுடன் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.
கேட்டுக்கு குழந்தை பிறந்தாலும் இன்னும் உலகம் டயானாவை நினைவுக்கு இழுத்து வரத்தான் செய்கிறது.
ராஜ குடும்பமும் டயானாவின் இழப்பை நேற்று நன்றாகவே உணர்ந்தது.
இப்போது மட்டுமல்ல ராஜ குடும்பத்தின் ஒவ்வொரு இன்ப நிகழ்வின்போதும் உலகம் டயானாவை “மிஸ்” பண்ணப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.